பக்கம் எண் :

688திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


602. நல்லா ரும்மவர் தீய ரெனப்படும்
சொல்லார் நன்மலர் சூடினார்
பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை
எல்லா ருந்தொழு மீசரே. 2

603. விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
எண்ணார் வந்தெ னெழில்கொண்டார்
பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை
உண்ணா ணாளு முறைவரே. 3

604. பூவுந் திங்கள் புனைந்த முடியினார்
ஏவி னல்லா ரெயிலெய்தார்

__________________________________________________

2. பொ-ரை: பற்கள் பொருந்திய வெண்மையான தலையோட்டை அணிந்தவரும், எல்லாராலும் தொழப்படுபவருமாகிய எம் திருப்பாற்றுறைச் செல்வராகிய ஈசர், நல்லவருக்கு நல்லவராவர். தீயை ஏந்தியதால் தீயர் எனவும் படுவார். அவர் நல்ல மலரைச் சூடியவர்.

கு-ரை: இவர் நல்லவரும் ஆவர்; தீயர் எனவும் சொல்லப் பெறுவர்; ஆயினும் எனது சொன்மலரைச் சூடினார் என்கின்றது. தீயர் - கையில் தீயையுடையவர். சொல் ஆர் நன் மலர் - சொல்லாகிய நிறைந்த நல்லமலர்கள்; என்றது, தலைவி பேசுவன யாவும் அவன் புகழேயாதல் தெரிவித்தது. எல்லாரும் தொழும் - பரிபாகமுடையவர் அஃதில்லாத உலகவர் யாவரும் வணங்கும்.

3. பொ-ரை: இயற்கையில் பண்ணிசை போல முரலும் வண்டினங்கள் பாடும் திருப்பாற்றுறையுள் எக்காலத்தும் உறைபவரும், விண்ணகத்தே தவழும் திங்கள் விளங்கும் திருமுடியினரும் ஆகிய இறைவர் என் இதயத்தில் இருப்பவராய் வந்து என் எழில்நலம் அனைத்தையும் கவர்ந்தார்.

கு-ரை: திருமூலநாதர் ஆராயாதே வந்து என்னழகெல்லாவற்றையும் கவர்ந்தார் என்கின்றது. எண்ணார் - எண்ணத்தில் இருப்பவர். இது உறுப்பு நலனழிதல் என்னும் மெய்ப்பாடு. பாற்றுறையுள் நாள்நாளும் உறைவர் எனப் பிரித்துப் பொருள்காண்க.

4. பொ-ரை: மூழ்கியவருடைய பாவங்களைப் போக்கும் தீர்த்த நலம் உடைய திருப்பாற்றுறையுள் மலர்களையும் பிறைமதியையும்