பாவந் தீர்புனன் மல்கிய பாற்றுறை
ஓவென் சிந்தை யொருவரே. 4
605. மாகந் தோய்மதி சூடி மகிழ்ந்தென
தாகம் பொன்னிற மாக்கினார்
பாகம் பெண்ணு முடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே. 5
606. போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி
நாதர் வந்தெ னலங்கொண்டார்
பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை
வேத மோதும் விகிர்தரே. 6
__________________________________________________
புனைந்த திருமுடி யினராய்க்
கணையொன்றால் பகைவராய் வந்தடைந்த
அசுரர்களின் முப்புரங்களை அழித்த இறைவரே என்
மனம் பிறவற்றில் செல்லாது ஓவுதல் செய்த
ஒருவராவர்.
கு-ரை: அம்பால் அடையார் புரம் எய்த
பாற்றுறைநாதனே என் சிந்தைக்கண் உள்ள ஒருவர்
என்கின்றது. ஏவின் - அம்பால். அல்லார் - பகைவர்.
ஓ என்பது வினாப்பொருளின் கண்ணது.
5. பொ-ரை: தம் திருமேனியின்
ஒருபாதியாய்ப் பெண்ணைக் கொண்டுள்ளவரும்,
நாகத்தை அணிகலனாகப் பூண்டவரும் ஆகிய,
திருப்பாற்றுறை இறைவர், வானகத்தே தோயும்
பிறைமதியை முடியிற் சூடி மகிழ்ந்து வந்து எனது
உடலைப் பொன்னிறமான பசலை பூக்கச்
செய்தவராவார்.
கு-ரை: ஒருபாதியில் பெண்ணையும் உடைய
பெருமான் என்னுடைய மார்பைப்
பொன்னிறமாக்கினார் என்று பிரிவால் வருந்திய
தலைவி பசந்தமையையறிவிக்கின்றது. மாகம் -
ஆகாயம். ஆகம் - மார்பு. நயவர் - நலமுடையவர்.
6. பொ-ரை: தொண்டர்கள் தம்
திருவடிகளைப் பரவத் திருப்பாற்றுறையுள் விளங்கும்
வேதங்களை அருளிய விகிர்தரும், பொன்போல்
திகழும் கொன்றை மலர்களைப் புனைந்த திருமுடியினை
உடைய தலைவருமாகிய சிவபிரானாரே என்பால் வந்து
என் அழகினைக் கவர்ந்தவராவார்.
|