611. பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரனைப்
பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ்
பத்தும் பாடிப் பரவுமே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
தலைவியுமாய் இருந்து அநுபவிக்கும்
அருள்நெறி முதிர்ச்சியால் என அறிக. வரும்
தோணிபுரப் பதிகத்தும் இக்காட்சியைக் காண்க.
11. பொ-ரை: அடியவர்கள் நிறைந்துள்ள
திருப்பாற்றுறையுள் எழுந்தருளிய ஆயிரம்
திருநாமங்களையுடைய இறைவனை, பக்தனாகிய
ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இனிய தமிழ்ப்
பாடல்களாகிய இப்பத்தையும் பாடிப் பரவுமின்.
கு-ரை: பாற்றுறைநாதரைப் பற்றிய
இப்பாடல் பத்தையுஞ் சொல்லிப் பரவுங்கள்
என்கின்றது. பத்து நூறு பெயரன் - ஆயிரந்
திருநாமத்தையுடையவன்.
திருப்புகழ்
எதிரி லாதபத்தி தனைமேவி
இனிய தாள்நினைப்பை இதுபோதும்
இதய வாரிதிக்குள்
உறவாகி
எனது ளேசிறக்க அருள்வாயே
கதிர காமவெற்பில் உறைவோனே
கனக மேருஒத்த புயவீரா
மதுர வாணியுற்ற கழலோனே
வழுதி கூன்நிமிர்த்த பெருமாளே.
- அருணகிரிநாதர்.
|
|