57. திருவேற்காடு
பதிக வரலாறு:
திருக்காளத்தி மலையை வணங்கிக்
காளத்தியிற் சில காலம் தங்கியிருந்த காழிப்
பிள்ளையார் அடியார் கூட்டத்தோடு காடும் மலையுங்
கடந்து, வழியில் பலதலங்களையும் வணங்கிக்
கொண்டு, பாலியாற்று வடகரையில் இருக்கும்
திருவேற்காட்டை வந்தடைந்தார்கள். அங்குள்ள
செழுஞ்சுடர் பொற்கோயிலை அடைந்து பணிந்து,
‘ஒள்ளிது
உள்ள ’ என்னும்
இப்பதிகத்தையருளிச் செய்தார்கள்.
பண்: பழந்தக்கராகம்
பதிக எண்: 57
திருச்சிற்றம்பலம்
612. ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி
வெள்ளி யானுறை வேற்காடு
உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்
தெள்ளி யாரவர் தேவரே. 1
613. ஆடனாக மசைத்தள வில்லதோர்
வேடங் கொண்டவன் வேற்காடு
__________________________________________________
1. பொ-ரை: மிகவும் சிறந்த
மெய்ப்பொருளை அன்போடு எண்ணினால் அவ்வெண்ணம்
நற்கதிக்கு வாயிலாம். அத்தகைய மெய்ப்பொருளாய்
வெண்மையான ஒளி வடிவினனாய் திருவேற்காட்டில்
எழுந்தருளியுள்ள இவ்விறைவனை நினைந்தவர்கள்
இவ்வுலகினில் உயர்ந்தவர் ஆவர். அவனைக் கண்டு
தெளிந்த அவர்கள் தேவர்களாவர்.
கு-ரை: மிகவும் உயர்ந்ததை எண்ணின்
அது நற்கதிக்கு வாயிலாம்; ஆதலால் வேற்காடு
எண்ணியவர்கள் இவ்வுலகில் தேவராவர் என்கின்றது.
ஒள்ளிது - உயர்ந்தபொருளை. உள்ள - எண்ண. உள்ளம் -
உயிருமாம். உள்ளியார் - எண்ணியவர்கள்.
2. பொ-ரை: ஆடுதற்குரிய பாம்பினை
இடையிற் கட்டிய, அளவற்ற பல்வேறு வடிவங்களைக்
கொண்டருளிய திருவேற்காட்டு
|