பக்கம் எண் :

694திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்
சேடராகிய செல்வரே. 2

614. பூதம் பாடப் புறங்காட் டிடையாடி
வேத வித்தகன் வேற்காடு
போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்
கேத மெய்துத லில்லையே. 3

615. ஆழ்க டலெனக் கங்கைக ரந்தவன்
வீழ்ச டையினன் வேற்காடு
தாழ்வு டைமனத் தாற்பணிந் தேத்திடப்
பாழ் படும்மவர் பாவமே. 4

_______________________________________________

இறைவனைப் பாடிப் பணிந்தவர்கள், இவ்வுலகினில் பெருமை பொருந்திய செல்வர்கள் ஆவர்.

கு-ரை: வேற்காடு பணிந்தார் இவ்வுலகில் பெரிய செல்வராவர் என்கின்றது. சேடர் - பெருமையுடையவர்.

3. பொ-ரை; பூதகணங்கள் பாட, சுடுகாட்டின்கண் நடனம் ஆடி, வேதங்களை அருளிய வித்தகனாக விளங்கும் திருவேற்காடு இறைவற்கு மலர்களும், சந்தனமும், நறும்புகை தரும் பொருள்களும் கொடுத்தவர்களுக்குத் துண்பங்கள் வருதல் இல்லையாம்.

கு-ரை: வேற்காட்டுநாதரைப் பூவுஞ்சாந்தும் புகையுங்கொண்டு வழிபட்டவர்க்கு ஏதம் எய்தாது என்கின்றது. புறங்காடு - சுடுகாடு. ஆடி - ஆடுபவன்; பெயர்ச்சொல். ஏதம் - துன்பம்.

4. பொ-ரை: ஆழமான கடல் என்று சொல்லத்தக்க கங்கை நதியை மறைத்துக்கொண்ட, விழுது போன்ற சடைமுடியினை உடைய திருவேற்காட்டு இறைவனைப் பணிவான மனத்தோடு வணங்கித்து திப்பவர்களின் பாவங்கள் அழிந்தொழியும்.

கு-ரை: பணிந்த மனத்தோடு ஏத்த பாவம் அழியும் என்கின்றது. ஆழ்கடல் எனக்கங்கை கரந்தவன் - பல மகாநதிகளைத் தன்னகத்து அடக்கிக்கொள்ளும் கடலைப்போல, கங்கையை அடக்கியவன். வீழ்சடை - விழுதுபோலும் சடை. தாழ்வுடை மனம் - பணிந்த உள்ளம். தாழ்வெனுந் தன்மை (சித்தியார்). பாவம் பாழ்படும் - பாவம் பயன் அளியாதொழியும்.