பக்கம் எண் :

 57. திருவேற்காடு695


616. காட்டினாலு மயர்த்திடக் காலனை
வீட்டி னானுறை வேற்காடு
பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர்
ஓட்டி னார்வினை யொல்லையே. 5

617. தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
வேலி னானுறை வேற்காடு
நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்
மாலி னார்வினை மாயுமே. 6

618. மல்லன் மும்மதின் மாய்தர வெய்ததோர்
வில்லி னானுரை வேற்காடு

_______________________________________________

5. பொ-ரை: மார்க்கண்டேயர், சிவனே முழுமுதல்வன் எனக் காட்டினாலும் அதனை உணராது மயங்கி அவர் உயிரைக் கவர வந்த அக்காலனை அழித்த சிவபிரான் உறையும் திருவேற்காட்டைப் பாடல்கள் பாடிப் பணிந்து வழிபட வல்லவர் தம்வினைகளை விரைவில் ஓட்டியவர் ஆவர்.

கு-ரை: இது பாடிப்பணிந்து ஏத்தவல்லவர் வினை ஓடும் என்கின்றது. காட்டினாலும் அயர்த்திடு அக்காலனை மார்க்கண்டேயர் பூசித்து, சிவன் முழுமுதல்வன் என்பதைக் காட்டினாலும் அதனை உணராதே மயங்கிய காலனை. வீட்டினான் - அழித்தவன். ஒல்லை - விரைவு. காட்டினானும் என்ற பாடமும் உண்டு.

6. பொ-ரை: தான் கட்டியும் போர்த்தும் உள்ள ஆடைகளைத் தோலினால் அமைந்தனவாகக் கொண்டுள்ள இறைவன் ஒளி பொருந்திய வேலோடு உறையும் திருவேற்காட்டை, ஆகம நூல்களில் விதித்தவாறு வழிபட்டுத் துதிக்க வல்லவர்களாகிய ஆன்மாக்களைப் பற்றிய மயங்கச் செய்யும் வினைகள், மாய்ந்தொழியும்.

கு-ரை: விதிப்படி ஏத்தவல்லவர்க்கு வினைமாயும் என்கின்றது நூலினால் - ஆகம விதிப்படி மாலினார் வினை - மயங்கிய ஆன்மாக்களினது வினை.

7. பொ-ரை: வளமை பொருந்திய முப்புரங்களும் அழிந்தொழியுமாறு கணை எய்த ஒப்பற்ற மேரு வில்லை ஏந்திய சிவபிரான்