பக்கம் எண் :

696திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே. 7

619. மூரல் வெண்மதி சூடுமுடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வார மாய்வழி பாடுநி னைந்தவர்
சேர்வர் செய்கழல் திண்ணமே. 8

620. பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
விரக்கி னானுறை வேற்காட்டூர்
அரக்க னாண்மை யடரப்பட் டானிறை
நெருக்கி னானை நினைமினே. 9

_______________________________________________

உறையும் திருவேற்காட்டைப் புகழ்ந்து சொல்ல வல்லவர்கள் சுருங்கா மனத்தினராவர். அங்குச் சென்று தரிசிக்க வல்லவர் நீண்ட ஆயுள் பெறுவர்.

கு-ரை: இறைவனை எப்பொழுதும் பேசவல்ல குவியாமனத்து அடியவர்கள் நீடுவாழ்வர் என்கின்றது. தீர்க்கம் - நெடுங்காலம்.

8. பொ-ரை: மிக இளைய வெண்மையான பிறைமதியைச் சூடும் திருமுடியை உடைய வீரனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள திருவேற்காட்டை, அன்போடு வழிபட நினைந்தவர். அப்பெருமானின் சிவந்த திருவடிகளைத் திண்ணமாகச் சேர்வர்.

கு-ரை: அன்போடு வழிபடுவார் அடி அடைவர் என்கின்றது மூரல் - இளமை. வாரம் - அன்பு.

9. பொ-ரை: பிரமனின் தலையோட்டில் பலியேற்கின்ற சமர்த்த னாகிய சிவபிரான் உறையும் திருவேற்காட்டில் அரக்கன் ஆகிய இராவணனின் ஆண்மையை அடர்த்துக் கால்விரலால் சிறிதே ஊன்றி நெருக்கிய அவனை நினைமின்கள்.

கு-ரை: இராவணனது ஆண்மையை அடர்த்த இறைவனை நினையுங்கள் என்கின்றது. பரக்கினார் - உலகில் தன் படைப்பால் உயிர்களைத் தனு கரண புவன போகங்களோடு பரவச் செய்தவராகிய