636. சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை
சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
ஆமா றறியா தலமந்துநீர்
அயர்ந்துங் குறைவில்லை யானேறுடைப்
பூமா ணலங்க லிலங்குகொன்றை
புனல்பொதிந்த புன்சடையி னானுறையும்
தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே. 3
637. ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை
யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
மான்று மனங்கருதி நின்றீரெல்லாம்
மனந்திரிந்து மண்ணின் மயங்காதுநீர்
மூன்று மதிலெய்த மூவாச்சிலை
முதல்வர்க் கிடம்போலு
முகில்தோய்கொடி
தோன்றுங் கடந்தைத்
தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே. 4
_______________________________________________
3. பொ-ரை: இறக்கும் நாளும், வாழும்
நாளும், பிறக்கும் நாளும் ஆகி்ய இவற்றோடு கூடிய
சலிப்பான வாழ்க்கை நீங்கச் செய்யும் தவம்
யாதென
அறியாது நீவிர் மறந்ததனாலும்
யாதும்குறைவில்லை. விடையேற்றை ஊர்தியாகக்
கொண்டு மலர்களில் மாட்சிமையுற்று விளங்கும்
கொன்றை மாலையும், கங்கையும் தங்கிய சிவந்த
சடையினை உடைய சிவபிரான் உறையும் தூய்மையான.
மாண்புடைய கடம்பைநகரில் விளங்கும் பெரிய
கோயிலாக அமைந்த திருத்தூங்கானை மாடத்தைத்
தொழுவீராக. அது ஒன்றே தவத்தின் பயனைத்
தரப்போதுமானதாகும்.
கு-ரை: பிறந்து, வாழ்ந்து, இறந்துவரும்
இந்தவாழ்க்கையை ஒழிக்கவிரும்புவீர்
இக்கோயிலைத் தொழுங்கள் என்கின்றது. சலிப்பு -
ஓய்தல். தவம் ஆமாறு - தவம் சித்திக்கும் வண்ணம்
அலமந்து - வருந்தி. தூமாண் கடந்தை - தூய்மையான
மாட்சிமைபொருந்திய கடந்தை.
4. பொ-ரை: நிலையானநோய், பிறப்பு,
இறப்பு, துன்பம் இவற்றை உடைய வாழ்க்கை
நீங்கவும், நிலையான வீடு பேற்றைப்
|