638. மயறீர்மை யில்லாத தோற்றம்மிவை
மரணத்தொ டொத்தழியு மாறாதலால்
வியறீர மேலுலக மெய்தலுறின்
மிக்கொன்றும் வேண்டா விமலனிடம்
உயர்தீர வோங்கிய நாமங்களா
லோவாது நாளும் அடிபரவல்செய்
துயர்தீர் கடந்தைத்
தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே. 5
_______________________________________________
பெறவும், தவம் செய்ய விரும்பி மயங்கி
நிற்கும் நீவிர் எல்லீரும் மனம் வேறுபட்டு
உலகில் மயங்காது. திரிபுரங்ளை எய்த அழியாத
வில்லை ஏந்தியவரும், உலகின் தலைவருமாகிய
சிவபிரானது இடமாக விளங்குவதாய், வானளாவிய
கொடிகள் தோன்றும் கடந்தை நகரில் உள்ள பெரிய
கோயிலாக அமைந்த திருத்தூங்கானை மாடத்தைத்
தொழுவீர்களாக.
கு-ரை: இதுவும் அது. பிணியூன்றும் பிறவி
- நோய் நிலை பெற்ற பிறப்பு. மான்று - மயங்கி.
மூவாச்சிலை - மூப்படையாத வில். முகில் - மேகம்.
5. பொ-ரை: மயக்கம் நீங்காத
பிறப்பிறப்புக்கள் அழியும் வழிகள் ஆதலால்
அவற்றின் நீங்கி மேலுலகம் எய்த நீவிர்
விரும்பினால் பெரிதாய முயற்சி எதுவும் வேண்டா.
எளிய வழியாகச் சிவபிரானது இடமாக விளங்குவதும்
நம் துயர்களைத் தீர்ப்பதும் ஆகிய கடந்தை
நகரில் உள்ள பெரிய கோயிலாகிய
திருத்தூங்கானைமாடத்தை அடைந்து அப்பெருமானுடைய
மிக உயர்ந்த திருப்பெயர்களைக் கூறி இடைவிடாது
அவன் திருவடிகளைத் தொழுவீர்களாக.
கு-ரை: பிறப்பிறப்புக்கள் அழியும்
வழிகள், ஆதலால், அவற்றை நீங்கி மேலுலகம்
எய்தலுறின் வேறொன்றும் தேட வேண்டாம். இறைவன்
நாமத்தைச் சொல்லிக்கொண்டு தூங்கானை
மாடத்தைத் தொழுங்கள் என்கின்றது.
மயல்தரர்மை - மயக்கம் நீங்கும்
உபாயம். ஆறு - வழி, வியல்தீர - பலதிறப்படுதல்
நீங்க. உயர்தீர ஓங்கிய நாமம் - உயர்ந்த பெயர்.
ஓவாது - இடைவிடாது.
|