641. பல்வீழ்ந்து நாத்தளர்ந்து
மெய்யில்வாடிப்
பழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லா
மிறையே பிரியா தெழுந்துபோதும்
கல்சூ ழரக்கன் கதறச்செய்தான்
காதலியுந் தானுங் கருதிவாழும்
தொல்சீர்க் கடந்தைத்
தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே. 8
__________________________________________________
முடியில் பிறை சூடியவரும், கொன்றை மாலை
அணிந்தவரும் ஆகிய பெருமான் பிரியாது உறைவதாய்,
நீர்த்துறைகள் சூழ்ந்த கடந்தை நகரிலுள்ள
தடங்கோயிலாகிய தூங்கானைமாடத்தை நாளும்
நினைந்து தொழுவீர்களாக.
கு-ரை: புல்லிய உணவுகொண்டு வருந்தும்
இழிந்த வாழ்வு ஒழியத் தவமாகிய பேருண்டியை
விரும்பியிருக்கின்றவர்களே! இக்கோயிலைத்
தொழுமின் என்கின்றது.
இறையூண் - சிற்றுணவு. துகள் - தூளி.
இடுக்கண் - துன்பம். தவம் நிறையூண் நெறி - தவமாகிய
நிறைந்த உணவைப்பெறுமார்க்கம். அலங்கல் - மாலை.
பிணையும் - விரும்பும்.
8. பொ-ரை: பல்வீழ்ந்து பேச்சுத்
தளர்ந்து, உடல் வாடிப் பலராலும் பழிக்கப்படும்
இவ்வுலக வாழ்க்கை நீங்கத் தவம் புரியும்இடம்
யாதெனக் கருதி நிற்கும் நீவிர் அனைவீரும்
சிறிதும் காலம் தாழ்த்தாது எழுந்துவருவீர்களாக.
கயிலைமலையைப் பெயர்த்த இராவணனைக் கதறுமாறு
அடர்த்த சிவபிரான் மலைமகளும் தானுமாய்க் கருதி
வாழும் பழமையான புகழையுடைய கடம்பை நகரில் உள்ள
பெருங்கோயிலாகிய தூங்கானைமாடத்தைத்
தொழுவீர்களானக.
கு-ரை: பல்வீழ்ந்து நாத்தளர்ந்து
பழிப்பாய வாழ்க்கை நீங்கத் தவம் புரியும் இடம்
தேடுபவர்களே! விரைந்து வாருங்கள், இக்கோயிலைத்
தொழுங்கள் என்கிறது. பழிப்பாய வாழ்க்கை
காளையரான காலத்துக் காமமுற்றாரும் இந்நிலையைக்
கண்டு ஏளனம் செய்யும் கிழப்பருவத்தது. இறையே -
சிறிதும். போதும் - வாருங்கள் கல் - கயிலை.
அரக்கன் - இராவணன்.
|