பக்கம் எண் :

 60. திருத்தோணிபுரம்717


649. பாராரே யெனையொருகாற்

றொழுகின்றேன் பாங்கமைந்த

காராருஞ் செழுநிறத்துப்

பவளக்காற் கபோதங்காள்

தேராரு நெடுவீதித்

திருத்தோணி புரத்துறையும்

நீராருஞ் சடையாருக்

கென்னிலைமை நிகழ்த்தீரே. 5

__________________________________________________

இன்றே சென்று உணர்த்து என்கின்றனள். காண்தகைய - அழகுமிக்க. பூண்தகைய - அணிகளால் அழகுபெற்ற. பொன்பயந்தாள் - பயலை பெற்றாள். சேண் - ஆகாயம். அவர் ஆண்டகையாய் இருப்பதால் அவரால் பூணத்தக்க தளராத முலையும் தளர்ந்து, மெலிந்து, மேனிபசந்தது என்று உணர்த்தினால், உடனேவந்து தலையளிசெய்வர் என்று இன்றே சென்று தூதுசொல்லவேண்டிய இன்றியமையாமையை விளக்குகிறாள். நீ சென்றால் பிறர்கண்ணில் படாமல் தங்கி, என்தூதை இரக சியமாய்ச் சொல்லுதற்கேற்ற அவகாசம் கிட்டும்வரைத் தங்குவதற்கு மணிமாடங்கள் இருக்கின்றன. அவரோ திருத்தோணிமலைச் சிகரத்தில் இருக்கிறார் என்று செவ்வி அறிதல் எளிமையும் செப்புகிறாள். இதில் நுகர்ச்சிக்குரிய முலை மெலிந்தால்இனி அவருக்கு பயன்படு மாறு யாங்ஙனம் என்பதையும உணரவைத்தாள். அடி - காரணம்.

5. பொ-ரை: அழகியதாய் அமைந்துள்ள கருமை நிறைந்த செழுமையான நிறத்தினையும் பவளம் போன்ற கால்களையும் உடைய புறாக்களே! உம்மைத் தொழுகின்றேன். வண்டு முதலியவற்றிடம் என் நிலைமை கூறியும் அவை என்னை ஒருமுறையேனும் பாராவாயின. நீவிர் தேரோடும் அகலமான வீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடையினை உடைய சிவபிரானிடம் சென்று என் பிரிவாற்றாத நிலையைக் கூறுவீர்களாக.

கு-ரை: இங்ஙனம் நாரை முதலானவற்றை இவள் வேண்ட, அவை இவளைத் திரும்பியும் பாராமல் ஒழிய, இன்னது செய்வது என்று தோன்றாத நிலையில் மாடப்புறாக்களை அழைத்துக் கூறுகிறாள். கபோதகங்காள்! உங்களைத் தொழுகின்றேன். என் தலைவருக்கு என் நிலையை உணர்த்துங்கள் என்கின்றாள். எனை ஒருகால் பாராரே - யான் அழைத்த அளி குருகு முதலியவர்கள் என்னை ஒரு முறையும் பாராரே. அளி முதலியவற்றைப் பாரார் என உயர்திணையாற் கூறி