650. சேற்றெழுந்த மலர்க்கமலச்
செஞ்சாலிக் கதிர்வீச
வீற்றிருந்த வன்னங்காள்
விண்ணோடு மண்மறைகள்
தோற்றுவித்த திருத்தோணி
புரத்தீசன் றுளங்காத
கூற்றுதைத்த திருவடியே
கூடுமா கூறீரே. 6
_______________________________________________
யது, பிரிவால் விளைந்த பேதைமையால்
ஆகும். பாங்கு - பக்கத்தில், கார் ஆரும் - கருமை
நிறைந்த. கபோதகம் - மாடப்புறா நீர் - கங்கை,
கபோதகங்காள் எனப் பன்மைவாய்பாட்டால்
அழைத்தது புறாக்கள் என்றும் இணைபிரியாமல்
இருத்தலின். அன்றி, இணைந்து வாழுகின்ற இவைகளும்
என் வேண்டுகோளிற்காகப் பிரிந்து, யான் அடையும்
துன்பத்தை இவைகள் எய்தல் ஆகாது என்ற
இரக்கத்தாலும் ஆம். தலைவனை "நீர்
ஆரும்சடையார்" என்றதுகங்கையாகிய ஒருத்தி
எஞ்ஞான்றும் உடன் உறைவதால் அவருக்குப்
பிரிவுத்துன்பம் தெரியாது. நிழலில் இருப்பவனுக்கு
வெயிலின் கொடுமை தெரியாதவாறுபோல.
என்னிலையைக் கண்டநீங்களே சொல்லும்வன்மையால்
அவரைச் செவிமடுக்கச் செய்யவேண்டும் என்று
குறிப்பித்தவாறு.
6. பொ-ரை: வளமான சேற்றிடை முளைத்து
மலர்ந்த தாமரை மலர்மேல் நெற்பயிர்கள் தம்
கதிர்களையே சாமரையாகவரச, அரச போகத்தில்
வீற்றிருக்கும் அன்னங்களே! விண்ணுலகம் மண்ணுலகம்
ஆகியவற்றையும் நான்கு வேதங்களையும்
தோற்றுவித்த திருத்தோணி புரத்தில் உறையும்
சிவபிரானாருடைய யாராலும் அசைத்தற்கு இயலாத
இயமனை உதைத்தழித்த திருவடிகளை யாம் அடையும்
வழிகளைக் கூறுவீர்களாக.
கு-ரை: புறாக்களும் இன்பத்தில்
மூழ்கி அசையாதிருக்க தாமரை ஆசனத்தில் இருபுறமும்
செந்நெற்கதிர்களாகிய சாமரைவீச, அரச
போகத்தில் இருக்கும் அன்னங்கள் இவள் கண்ணில்
பட்டன. இரங்கும் பெருந்தன்மை அற்ற அவைகள்
கிடக்கட்டும். இந்த அரச அன்னமாவது என்குறையை
நிறைவேற்றும் என்று எண்ணி அதனை அழைத்தாள்.
தனக்குப் பிரிவே பெருங்காலனாக இருந்து
உயிர்கொள்வதை உணர்த்தினாள். காலகாலன்
திருவடியைக் கூடினால் கலக்க மில்லை என்று
தெரிவித்துக்கொள்கின்றாள். விண்ணும் மண்ணும்
|