652. பானாறு மலர்ச்சூதப்
பல்லவங்க ளவைகோதி
ஏனோர்க்கு மினிதாக
மொழியுமெழி லிளங்குயிலே
தேனாரும் பொழில்புடைசூழ்
திருத்தோணி புரத்தமரர்
கோனாரை யென்னிடைக்கே
வரவொருகாற் கூவாயே. 8
653. நற்பதங்கண் மிகவறிவாய்
நானுன்னை வேண்டுகின்றேன்
பொற்பமைந்த வாயலகிற்
பூவைநல்லாய்
போற்றுகின்றேன்
_______________________________________________
8. பொ-ரை: பால்மணம் கமழும்
மலர்களைக் கொண்ட மாமரத்தின் தளிர்களைக்
கோதி உண்டு, எல்லோர்க்கும் இனிதாகக் கூவும்
அழகிய இளமையான குயிலே! தேன் நிறைந்த
பொழில்கள் புடைசூழ்ந்து விளங்கும்
திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய தேவர்
தலைவனாகிய சிவபிரான் என்னிடம் வருமாறு
ஒருமுறையேனும் கூவுவாயாக.
கு-ரை: பிரிவு நோய் அறியாமையினாலே
அன்னங்களும் பேசாமல் இருக்க, குரல் நயம்
இன்மையால் அவரும் கேளார் என்ற எண்ணத்தால்,
அவரை மீட்டும் வற்புறுத்தாது குயிலைப் பார்த்துத்
தலைவன்வரக் கூவாய்! என வேண்டுகின்றாள். குயில்
மாந்தளிரை உண்டு மிக இனிமையாகக்கூவும் தன்மையது
என்று குறிக்கின்றாள். அது அங்குச்சென்று கூவினாலே
போதும் அவர் மனம்மாறும் என்று பாய் என வேண்டிய
அவள், இதனைக்கூவாய் என்றுமட்டும் வேண்டுகிறாள்.
தோணிபுரத்தைப் பொழில்சூழ் தோணிபுரம் என்றது
தூது போகின்ற குயிலுக்குத் தங்குமிடம் வசதியாய்
உள்ளது என்பதை அறிவிக்க. என் இடைக்கே
என்பதில், ஏகாரம் வந்தால் பிரியவிடாது
காப்பாற்றும் பொறுப்பும் உன்னுடையதே என்று
குறிப்பித்து நிற்கின்றது. சூதப் பல்லவம் -
மாந்தளிர்.
9. பொ-ரை: அழகமைந்த வாயாகிய
அலகினை உடைய நாகன
|