பக்கம் எண் :

 60. திருத்தோணிபுரம்721


சொற்பதஞ்சேர் மறையாளர்

திருத்தோணி புரத்துறையும்

விற்பொலிதோள் விகிர்தனுக்கென்

மெய்ப்பயலை விளம்பாயே. 9

654. சிறையாரு மடக்கிளியே

யிங்கேவா தேனொடுபால்

முறையாலே யுணத்தருவன்

மொய்பவளத் தொடுதரளந்

துறையாருங் கடற்றோணி

புரத்தீசன் றுளங்குமிளம்

பிறையாளன் திருநாமம்

எனக்கொருகாற் பேசாயே. 10

_______________________________________________

வாய்ப் பறவையே! நான் உன்னைத் துதித்துப் போற்றுகிறேன். தலைவனிடம் முறையிடுதற்குரிய செவ்விகளை நீ மிகவும் நன்கறிவாய் ஆதலால். இம்முறையீட்டை உன்பால் தெரிவிக்கின்றேன். சொற்களால் அமைந்த பதம் என்னும் இசையமைப்புடைய வேதங்களில் வல்லமறையவர் வாழும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய வில்லாற்பொலியும் தோளை உடைய விகிர்தனுக்கு என் உடலில் தோன்றிய பசலை நோயை உரைப்பாயாக.

கு-ரை: குயிலும் வேனிற்காலத்தன்றி பொழிலிடைத் தலைவர் வரினன்றித் தூதுசெல்லும் தரத்தன அல்ல என்பதை உட்கொண்ட தலைவி, நாகணவாய்ப்புள்ளை வேண்டுகின்றாள். நற்பதங்கள் மிக அறிவாய் - நல்ல சந்தர்ப்பத்தை நன்றாக அறிவாய். பொற்பு - அழகு. சொற்பதம் - சொல்லப்படுகின்ற பதம் என்னும் ஓதும்முறை. தலைவன் தோளும் சாமர்த்தியமுமே தம்மை வசீகரித்தன என்பாள், ‘தோள்விகிர்தனுக்கு’ என்றாள். தன்னுடைய உள்ளக் காதலை, மெய்ப்பயலை பலர் அறியப் பரப்புதலின், அதனை நீக்கவேண்டியதன் இன்றியமையாமையை எடுத்து இயம்புக என்று குறிப்பித்தாள்.

10. பொ-ரை: அழகிய சிறகுகளை உடைய இளங்கிளியே! என்பால் வருவாயாக. நான் உனக்குத் தேனையும் பாலையும் மாறி மாறி உண்ணத் தருவேன். நீ செறிந்த பவளங்களையும் முத்துக்களையும் கரைகளில் சேர்ப்பிக்கும் கடல் அருகில் உள்ள திருத்தோணிபுரத்தில் உறையும் இளம்பிறை சூடிய பெருமானின் திருநாமத்தை ‘ஒரு முறை‘