657. வாரேற்ற பறையொலியுஞ்
சங்கொலியும் வந்தியம்ப
ஊரேற்ற செல்வத்தோ
டோங்கியசீர் விழவோவாச்
சீரேற்ற முடைத்தாய
செங்காட்டங் குடியதனுள்
காரேற்ற கொன்றையான்
கணபதீச் சரத்தானே. 2
658. வரந்தையான் சோபுரத்தான்
மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான்
கிண்கிணியான் கையதோர்
சிரந்தையான் செங்காட்டங்
குடியான்செஞ் சடைச்சேரும்
கரந்தையான் வெண்ணீற்றான்
கணபதீச் சரத்தானே. 3
__________________________________________
விரை - மனம் முறைகொண்டு - விதிப்படி.
முட்டாமே - இடை விடாமல். சிறை - சிறகு. அறையும் -
ஒலிக்கும். கறை - விடம்.
2. பொ-ரை: கார்காலத்தே மலரும்
கொன்றை மலரை அணிந்த சிவபிரான், வாராமல்
இழுத்துக் கட்டப்பட்ட பறைகளின் ஒலியும,
சங்குகளின் ஒலியும் வந்திசைக்க ஊர் முழுதும்
நிறைந்த செல்வ வளங்களோடு பரவிய புகழை உடைய
திருவிழாக்கள் இடைவிடாது நிகழும்
திருச்செங்காட்டங்குடியில் விளங்கும்
கணபதீச்சசரம் என்னும் கோயிலில்
எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: பலவகை வாச்சிய ஒலிகள்
நீங்காததும் விழவறாதது மாகிய செங்காட்டங்குடிக்
கணபதீச்சரத்தான் என்கின்றது. வார் ஏற்ற பறை -
வாராமல் இழுத்துக் கட்டப்பெற்ற பறை. சீர்
ஏற்றம் - புகழின் மிகுதி. கார் - கார்காலம்.
3. பொ-ரை: கணபதீச்சரத்தில்
எழுந்தருளியுள்ள இறைவன், வரந்தை, சோபுரம் ஆகிய
தலங்களில் எழுந்தருளியிருப்பவன். வேதா கமங்களை
அருளிச் செய்தவன். கோவணம் அணிந்தவன். காலிற்
|