659. தொங்கலுங் கமழ்சாந்து
மகிற்புகையுந் தொண்டர்கொண்
டங்கையாற் றொழுதேத்த
வருச்சனைக்கன் றருள்செய்தான்
செங்கயல்பாய் வயலுடுத்த
செங்காட்டங் குடியதனுள்
கங்கைசேர் வார்சடையான்
கணபதீரச் சரத்தானே. 4
__________________________________________
கிண்கிணி அணிந்தவன். கையில்
உடுக்கை ஒன்றை ஏந்தியவன். சிவந்த சடைமுடிமீது
கரந்தை சூடியவன். திருவெண்ணீறு அணிந்தவன்.
அப்பெருமான் திருச்செங்காட்டங்குடியில்
கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: வரந்தை முதலிய பதிகளில்
இருப்பவனும், உடுக்கை, கோவணம், கிண்கிணி, கபாலம்
இவற்றையுடையவனனும் கணபதீச்சரத்தான்
என்கின்றது.
வரந்தை, கிரந்தை, சோபுரம், என்பன
ஊர்ப் பெயர்கள். மந்திரம் - வேதம். தந்திரம் -
ஆகமம்.
கையது ஓர் சிரந்தையான் - கையின்
கண்ணதாக ஓர் உடுக்கையை உடையான். சிரந்தை -
உடுக்கை. (பெருந்தொகை - 54.) கரந்தை - சிவகரந்தை
என்ற மணமுள்ளபூண்டு.
4. பொ-ரை: மணம் கமழும் மாலைகளும்
சந்தனமும், அகில் புகையும் கொண்ட தொண்டர்கள்
தம் அழகிய கைகளால் தொழுது போற்றிவணங்கி
அருச்சிக்க அவர்கட்கு உடனே அருள் செய்த
பெருமானும் கங்கை தங்கிய நீண்ட சடைமுடியை
உடையவனுமாகிய சிவபிரான். சிவந்த கயல் மீன்கள்
பாயும் வளமான வயல்கள் புறமாகச் சூழ்ந்த
திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில்
எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: தொண்டர் அருச்சனைக்
கருள்செய்தான் கணபதரச்சரத்தான் என்கின்றது.
தொங்கல் - மாலை.
|