660. பாலினால் நறுநெய்யாற்
பழத்தினாற் பயின்றாட்டி
நூலினான் மணமாலை
கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
சேலினார் வயல்புடைசூழ்
செங்காட்டங் குடியதனுள்
காலினாற் கூற்றுதைத்தான்
கணபதீச் சரத்தானே. 5
661. நுண்ணியான் மிகப்பெரியான்
நோவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான்நந்
தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங்
குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான்
கணபதீச் சரத்தானே. 6
__________________________________________
5. பொ-ரை: தனது இடத் திருவடியால்
இயமனை உதைத்தருளிய இறைவன், அடியவர்கள் ஆகம
விதிப்படி பாலினாலும் மணம் கமழும் நெய்யாலும்,
பழவர்க்கங்களாலும் விரும்பி அபிடேகித்து
மணமாலைகளைக் கொண்டு வந்து சூட்டி அன்போடு
வழிபடுமாறு சேல்மீன்கள் நிறைந்த வளமான
வயல்கள் புடை சூழ்ந்துள்ள திருச்
செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில்
எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: அடியார் பாலும்
நெய்யுங்கொண்டு அபிடேகித்து மணமாலைகொண்டு
வழிபடக் கூற்றுதைத்தான் இவ்வூரான் என்கின்றது
பயின்று - பலகாலும் பழகி. நூலினான் - வேதவிதிப்படி.
புரிந்து - விரும்பி.
6. பொ-ரை:
திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில்
எழுந்தருளியுள்ள இறைவன் நுண்ணியன யாவற்றினும் மிக
நுண்ணியன். பருமையான பொருள்கள் யாவற்றிலும்
மிகப் பருமையானவன். நோய் முதலியவற்றால்
வருந்துவோர் தம் வாயினால் துதிக்கப் பெறுவன்.
தண்மையானவன். புறச்சமயிகட்கு வெய்யவன். நமது
|