பக்கம் எண் :

728திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


662. மையினார் மலர்நெடுங்கண்

மலைமகளோர் பாகமாம்

மெய்யினான் பையரவ

மரைக்கசைத்தான் மீன்பிறழச்

செய்யினா ரகன்கழனிச்

செங்காட்டங் குடியதனுட்

கையினார் கூரெரியான்

கணபதீரச் சரத்தானே. 7

__________________________________________

முடிமீதும் மனத்தின் கண்ணும் உறைபவன். உறுதியானவன். தனது சிவந்த சடைமீது பிறைமதிக் கண்ணியைச் சூடியவன். நெற்றியில் கண்ணுடையவன்.

கு-ரை: நுண்மைக்கு நுண்ணியனாகவும், பருமைக்குப் பரியனாகவும், வருந்துவார் வாயுளானாகவும், தண்ணியனாகவும் வெம்மையனாகவும், மேலும் அகத்தும் இருப்பனாகவும் விளங்குங் கண்ணுதலான் கணபதரச்சரத்தான் என்கின்றது. ‘நுண்ணியான் மிகப்பெரியான்‘ என்றதும், (அணோரணீயாந் மஹதோ மஹீயாந்) என்னும் உபநிடதக் கருத்தும் ஒத்தமை காண்க, தன்னடியடைந்த அடியார் கட்குத் தண்ணியான், புறச்சமயத்தார்க்கு வெய்யான், கிரியாவான்களுக்குச் சகத்திரதளபத்மத்தின் மேலதாகத் தலைமேலான், ஞானிகட்கு மனத்துளான் என்க. கண்ணி - தலையில் சூடப்படும் மாலை.

7. பொ-ரை: கருங்குவளை மலர் போன்ற நீண்ட கண்களை உடைய மலைமகளாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாகக் கொண்டுள்ள திருமேனியனும், படம் பொருந்திய பாம்பை இடையிலே கட்டியவனும், கையின்கண் மிகுந்துள்ள தீயை ஏந்தியவனுமாகிய சிவபிரான், மீன்கள் விளங்கித் திரியும் வயல்களாலும் அகன்ற கழனிகளாலும் சூழப்பட்ட திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

கு-ரை: மலைமகளை ஓர் பாகமாகக் கொண்டவன், கையில் மழுவேந்திய கணபதீச்சரத்தான் என்கின்றது. மையினார் மலர் - நீலமலர், பையரவம் - படத்தோடு கூடிய பாம்பு. மீன் பிறழ் அச்செய்யின் ஆர் அகன் கழனி - மீன்கள் துள்ளுகின்ற அந்த வயலையும், நிறைந்த அகன்ற நீர்நிலைகளையும் (உடைய). செய் - பண்படுத்தப் பெற்ற வயல். கழனி -தானே அமைந்த விளைபுலம்.