பக்கம் எண் :

730திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


665. செடிநுகருஞ் சமணர்களுஞ்

சீவரத்த சாக்கியரும்

படிநுகரா தயருழப்பார்க்

கருளாத பண்பினான்

பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க்

கருள்செய்யும் பொருட்டாகக்

கடிநகராய் வீற்றிருந்தான்

கணபதீச் சரத்தானே. 10

__________________________________________

ஓங்கி நின்றவன் இவ்வுலகில் சிற்றம்பலத்திலும் தேனூரிலும் கானூரிலும் கழுமலத்திலும் விளங்குபவன். அவ்விறைவன் திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

கு-ரை: அவன் ஏறுவதுவிடை; இடம் வான், வையகம், வாழ்த்துவார் மனம், தேனூர் கானூர் முதலியன என்கின்றது.

ஆன் ஊரா ஊழி தருவான் - இடபத்தை ஏறிச் சுற்றுவான். இருவர் - அயனும் மாலும். வானூரான் - விண்ணிடமாக ஓங்கி வளர்ந்தவன். இங்ஙனம் புறத்தானே எனினும் வாழ்த்துவார் மனத்தகத்துள்ளான்.

10. பொ-ரை: முடைநாற்றத்தை நுகரும்சமணர்களும், காவியாடை கட்டிய புத்தர்களும் எம்பெருமானுடைய இயல்புகளை அறிந்துணராது துன்புறுபவர்கள், அவர்கட்கு அருள்புரியாத இயல்பினனாகிய சிவபிரான் திருநீற்று மணத்தையே நுகரும் சிறுத்தொண்டர்க்கு அருள்செய்யும் பொருட்டுத் திருச்செங்காட்டங்குடியை விளக்கிய தலமாகக் கொண்டு அங்குள்ள கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

கு-ரை: புறச்சமயத்தார்க்கிருளாயிருப்பவன் சிறுத்தொண்ட நாயனார்க்கருள் வழங்க இந்நகரில் எழுந்தருளியிருக்கின்றான் என்கின்றது.

செடி - நாற்றம். சீவரம் - காவியாடை. படிநுகராது - பூமியின் கண் நுகரத்தகுவன நுகராதே, அயர் உழப்பார் - துன்பத்தைத் தாமே தேடிக்கொண்டு வருந்துபவர்கள். பொடி - விபூதி, கடி நகர் - காவல் நகரம்.