பக்கம் எண் :

 62. திருக்கோளிலி733


668. ஆடரவத் தழகாமை

யணிகேழற் கொம்பார்த்த

தோடரவத் தொருகாதன்

துணைமலர்நற் சேவடிக்கே

பாடரவத் திசைபயின்று

பணிந்தெழுவார் தம்மனத்தில்

கோடரவந் தீர்க்குமவன்

கோளிலியெம் பெருமானே. 2

669. நன்றுநகு நாண்மலரால்

நல்லிருக்கு மந்திரங்கொண்

டொன்றிவழி பாடுசெய

லுற்றவன்ற னோங்குயிர்மேல்

கன்றிவரு காலனுயிர்

கண்டவனுக் கன்றளித்தான்

கொன்றைமலர் பொன்றிகழுங்

கோளிலியெம் பெருமானே. 3

__________________________________

2. பொ-ரை: படம் எடுத்து ஆடும் இயல்புடைய பாம்பை நாணாகக் கொண்டு அதில் அழகிய ஆமை ஓட்டையும் பன்றிக் கொம்பையும் கோத்து அணிந்தவனும், தோடாகப் பாம்பையே கொண்டவனும் ஆகிய சிவபிரானது இரண்டு மலர் போன்ற சிவந்த நல்ல திருவடிகளையே பாடலால் வரும் இசையினால் பாடிப் பழகிப் பணிந்து வணங்குபவர்களின் மனக்கோணலைத் தீர்த்தருள்பவன் திருக்கோளிலி எம்பெருமானாவான்.

கு-ைர: பாம்பாகிய நாணில் ஆமையோட்டையும், பன்றிக் கொம்பையும் கட்டியணிந்த இறைவன் திருவடியில், துதிப்பாக்களைச் சொல்லி எழுவார் மனத்துக் கோணலை நீக்கும் பெருமான் இவர் என்கின்றது. கேழல் - பன்றி. தோடு அரவம் - தோடாக உள்ள பாம்பு. பாடு அரவம் - பாட்டோசை. கோடரவம் - கோணல்.

3. பொ-ரை: அழகிதாக மலர்ந்த புதிய பூக்களைக் கொண்டு இருக்கு வேத மந்திரங்களைக் கூறி மன ஒருமையோடு வழிபாடு செய்த மார்க்கண்டேயனின் உயர்ந்த உயிரைக் கவரச் சினந்து வந்த