பக்கம் எண் :

756திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


696. பைவாயரவ மரையிற்சாத்திப்

பாரிடம் போற்றிசைப்ப

மெய்வாய்மேனி நீறுபூசி

யேறுகந் தானிடமாம்

கைவாழ்வளையார் மைந்தரோடுங்

கலவியி னானெருங்கிச்

செய்வார்தொழிலின் பாடலோவாத்

தென்றிருப் பூவணமே. 7

697. மாடவீதி மன்னிலங்கை

மன்னனை மாண்பழித்துக்

கூடவென்றி வாள்கொடுத்தாள்

கொள்கையி னார்க்கிடமாம்

__________________________________________________

கு-ரை: நல்லது தீது இரண்டையுங்கடந்த பெருமான், எல்லோரும் ஏத்தநின்ற பெருமான் இடம் இது என்கின்றது. நன்றும் தீதும் வினையான் வருவன ஆதலின் வினையிலியாகிய பெருமானுக்கு அவ்விரண்டும் இல்லையாயிற்று. குன்றில் ஒன்றி - மலைகளிற் பொருந்தி. முன்றில் - முன்வாயிலில்.

7. பொ-ரை: படம் பொருந்திய வாயினை உடைய பாம்பை இடையில் கட்டிக்கொண்டு, பூதகணங்கள் போற்றிப் பாட, மேனி முழுதும் மெய்மை வடிவான திருநீற்றைப் பூசி, விடையேற்றை ஊர்ந்துவரும் சிவபிரானது இடம், கைகளில் வளையல்களை அணிந்துள்ள இளமகளிர் தம் காதலர்களோடு புணர்ச்சி விருப்புடையராய் நெருங்கிச் செய்யப்படும் கலவி பற்றிய பாடல்களின் ஓசை நீங்காத அழகிய திருப்பூவணமாகும்.

கு-ரை: பாம்புடுத்துப் பூதம்போற்ற நீறுபூசி இடபமூர்ந்தவன் இடம் இது என்கின்றது. பை - படம். பாரிடம் - பூதம். கைவாழ் வளையார் - இளைய மகளிர்கள். கலவி - புணர்ச்சி. கலவிக் காலத்து நிகழ்த்தும் காதற்பாட்டு நீங்காத பூவணம் என்க.

8. பொ-ரை: மாடவீதிகள் நிலைபெற்ற இலங்கை மன்னன் இராவணன் பெருவீரன் என்று மக்கள் பாராட்டிய சிறப்பை அழித்து, அவன் பிழை உணர்ந்து பாடி வேண்டிய அளவில் உடன் வெற்றி நல்கும் வாளைக் கொடுத்து ஆளும் அருட்கொள்கையாளனாகிய சிவ