பக்கம் எண் :

 64. திருப்பூவணம்757


பாடலோடு மாடலோங்கிப்

பன்மணி பொன்கொழித்து

ஓடிநீரால் வைகைசூழு

முயர்திருப் பூவணமே. 8

698. பொய்யாவேத நாவினானும்

பூமகள் காதலனும்

கையாற்றொழுது கழல்கள்போற்றக்

கனலெரி யானவனூர்

மையார்பொழிலின் வண்டுபாட

வைகைமணி கொழித்துச்

செய்யார்கமலந் தேனரும்புந்

தென்றிருப் பூவணமே. 9

__________________________________________________

பிரானுக்குரிய இடம், ஆடல் பாடல்களால் மிக்க சிறப்புடையதும், பல்வகை மணிகளையும் பொன்னையும் அடித்து ஓடிவரும் நீரோடு வைகையாறு சூழ்ந்ததுமான உயர்ந்த திருப்பூவணமாகும்.

கு-ரை: இராவணனை அடக்கி ஆண்டு, வாளும் அருள்செய்த மன்னர்க்கு இடம் பூவணம் என்கின்றது. மாண்பு - சிறப்பு.

9. பொ-ரை: என்றும் பொய்யாகாத வேதங்களை ஓதும் நாவினன் ஆகிய நான்முகனும், மலர்மகள் கணவனாகிய திருமாலும், தம் கைகளால் தன் திருவடிகளைத் தொழுது போற்ற, சிவந்த எரி உருவான சிவபிரானது ஊர், கருநிறம் பொருந்திய சோலைகளில் வண்டுகள் பாடுவதும், வைகை ஆறு மணி கொழித்து வளம் சேர்ப்பதும், சிவந்த தாமரை மலர்களில் தேன் அரும்பி நிற்பதுமான அழகிய திருப்பூவணமாகும்.

கு-ரை: அயனும் மாலும் அறியொண்ணாவகை அழலுரு வானவனூர் இது என்கின்றது.

பொய்யா வேதம் - எக்காலத்தும் பொய்யாகாத வேதம். வேதத்தின் நித்யத்துவம் கூறியது. பொழிலில் வண்டு பாடச் செய்களிற்கமலம் தேனரும்பும் என்றது கன்று கத்தச் சுரக்கும் கறவைபோல வண்டுபாடக் கமலம் மலர்ந்து தேன்சுரக்கும் என்பதாம்