699. அலையார்புனலை நீத்தவருந்
தேரருமன்பு செய்யா
நிலையாவண்ண மாயம்வைத்த
நின்மலன் றன்னிடமாம்
மலைபோற்றுன்னி வென்றியோங்கு
மாளிகை சூழ்ந்தயலே
சிலையார்புரிசை பரிசுபண்ணுந்
தென்றிருப் பூவணமே. 10
700. திண்ணார்புரிசை மாடமோங்குந்
தென்றிருப் பூவணத்துப்
பெண்ணார்மேனி யெம்மிறையைப்
பேரிய லின்றமிழால்
நண்ணாருட்கக் காழிமல்கு
ஞானசம்பந்தன் சொன்ன
பண்ணார்பாடல் பத்தும்வல்லார்
பயில்வது வானிடையே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
10. பொ-ரை: அலைகள் வீசும் நீரில்
நீராடாது அதனைத் துறந்த சமணரும் புத்தரும் புண்ணியப்
பேறு இன்மையால் அன்பு செய்து வழிபாட்டில் நிலைத்திராது
அவர்கட்கு மாயத்தை வைத்த குற்றமற்ற சிவபிரானுக்குரிய
இடம், வெற்றி மிக்க மாளிகைகள் மலைபோல்
நெருங்கி அமைய அவற்றைச் சூழ்ந்து கருங்கல்லால்
ஆகிய மதில்கள் அழகு செய்யும் அழகிய திருப்பூவணமாகும்.
கு-ரை: புத்தர் சமணர் அன்புசெய்து நிலையாதவண்ணம்
அவர்கட்கு மாயையைக்கூட்டிய நின்மலன் இடம் இது என்கின்றது.
புனலை நீத்தவர் - நீராடாதே அதனை விலக்கிய சமணர்.
தேரர் - புத்தர். துன்னி - நெருங்கி. சிலையார்
புரிசை - மலையை ஒத்த மதில். பரிசு - அழகு.
11. பொ-ரை: வலிமை பொருந்திய
மதில்களும் மாடவீடுகளும் நிறைந்த அழகிய திருப்பூவணத்தில்
பெண்ணொரு பாகனாம் திருமேனியோடு விளங்கும் எம்
தலைவனாகிய சிவபிரானைப் பெருமை
|