பக்கம் எண் :

 65. காவிரிப்பூம்பட்டினத்துத்759


பொருந்திய இனிய தமிழால் பகைவராய புறச் சமயத்தவர் அஞ்சுமாறு சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் சொல்லிய இவ்விசைத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் ஓத வல்லவர் வாழ்வது வான் உலகமாகும்.

கு-ரை: இந்தப் பண்ணார் பாடல் வல்லார் வானுலகிற் பயில்வார் என்கின்றது. திண் - வலிமை. நண்ணார் - பகைவர். உட்க - அஞ்ச.

திருஞானசம்பந்தர் புராணம்

பற்றார்தம் புரங்கள்மலைச் சிலையால் செற்ற

பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து

புற்றாரும் பணிபூண்ட புனித னார்தம்

பூவணத்தைப் புக்கிறைஞ்சிப் புகழ்ந்து பாடிக்

கற்றார்கள் தொழுதேத்துங் கானப் பேரும்

கைதொழுது தமிழ்பாடிச் சுழியல் போற்றிக்

குற்றாலங் குறும்பலாக் கும்பிட் டேத்திக்

கூற்றுதைத்தார் நெல்வேலி குறுகி னாரே.

- சேக்கிழார்.

ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

அறிவாகி இன்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த

அமணான வன்குண்டர் கழுவேற முன்கண்ட

செறிமாட வண்சண்பை நகராளி என்தந்தை

திருஞான சம்பந்தன் அணிநீடு திண்குன்றில்

நெறியால மண்டுன்றி முனைநாள்சி னங்கொண்டு

நிறைவார் புனந்தின்று மகன்மேல் வருந்துங்கள்

வெறியார் மதந்தங்கு கதவா ரணங்கொன்ற

வெகுளாத நஞ்சிந்தை விறலான் உளன்பண்டே.

- நம்பியாண்டார் நம்பி.