725. உரமன்னுயர்கோட் டுலறுகூகை
யலறு மயானத்தில்
இரவிற்பூதம் பாடவாடி
யெழிலா ரலர்மேலைப்
பிரமன்றலையி னறவமேற்ற
பெம்மா னெமையாளும்
பரமன்பகவன் பரமேச்சுவரன்
பழன நகராரே. 4
__________________________________________________
தும் பறை, சங்கு ஆகியவற்றை முழக்கியும்,
பணிந்தும் இடைவிடாது வழிபடும் திருப்பழனநகர்
இறைவர் சடைமேல் பிறையையும், கங்கையையும்
உடையவர். பறை வாய் போன்ற வட்டமான, விழிகளையுடைய
பேய்கள்வாழும் மயானத்தைத் தமக்கு இடமாகக்கொண்டவர்.
அனைத்துலக மக்கட்கும் தலைவர்.
கு-ரை: கங்கையும் பிறையும் சூடியவர்,
மயானத்துறைபவர் பழனத்தார் என்கின்றது.
அறையும் - ஒலிக்கின்ற. அடியார் பரவி,
பாடல்செய் ஓவாப் பழனம் எனக் கூட்டுக.
4. பொ-ரை: திருப்பழன நகர் இறைவர்
வலிமை பொருந்திய உயரமான மரக்கிளைகளில் அமர்ந்து
ஒலி செய்யும் கூகைகள் அலறும் மயானத்தே நள்ளிருளில்
பூதங்கள் பாட ஆடியும் அழகிய தாமரை மலர்மேல்
உறையும் பிரமனது தலையோட்டில் பலியேற்றும் திருவிளையாடல்
புரியும் பெருமானார் எம்மை ஆளும் பரமர் ஆவார்.
அவர் பகவன், பரமேச்சுவரன் என்பனவாகிய பெயர்களை
உடையவர்.
கு-ரை: மயானத்துப் பூதம் பாட, நள்ளிருளில்
நடமாடுபவர் இந்நாதர் என்கின்றது.
உரம் - வலிமை. உலறு கோட்டு - வற்றிய
கிளைகளில். கூகை - கோட்டான். அலர் மேலைப் பிரமன்
- தாமரை மலர்மேல் உள்ள பிரமன். நறவம் - கள். தேன்;
என்றது உணவு என்னும் பொதுமையில் நின்றது. பரமன் -
உயர்ந்தவற்றிற்கெல்லாம் உயர்ந்தவன். பகவன் -
ஆறு குணங்களையுடையவன்.
|