726. குலவெஞ்சிலையான் மதின்மூன்றெரித்த
கொல்லே றுடையண்ணல்
கலவமயிலுங் குயிலும்பயிலுங்
கடல்போற் காவேரி
நலமஞ்சுடைய நறுமாங்கனிகள்
குதிகொண் டெதிருந்திப்
பலவின்கனிக டிரைமுன்சேர்க்கும்
பழன நகராரே. 5
727. வீளைக்குரலும் விளிச்சங்கொலியும்
விழவின் னொலியோவா
மூளைத்தலைகொண் டடியாரேத்தப்
பொடியா மதிளெய்தார்
ஈளைப்படுகி லிலையார்தெங்கிற்
குலையார் வாழையின்
பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப்
பழன நகராரே. 6
__________________________________________________
5. பொ-ரை: தோகைகளையுடைய மயில்கள்,
குயில்கள் வாழ்வதும், கடல்போல் பரந்து விரிந்த
காவிரி ஆற்றின் அலைகள் மாங்கனிகளையும், பலாவின்
கனிகளையும் ஏந்திக் குதித்து உந்தி வந்து கரையிற்
சேர்ப்பதுமாகிய திருப்பழன நகர் இறைவர், உயர்ந்த
கொடிய மலை வில்லால் அசுரர்களின் முப்புரங்களையும்
எரித்தவர். பகைவரைக் கொல்லும் ஆனேற்றையுடைய
அண்ணல் ஆவார்.
கு-ரை: வில்லால் திரிபுரமெரித்த
சிவன் பழனத்தான் என்கின்றது. பின்னிரண்டடிகளில்
கடல்போன்ற காவிரியின் அலைகள் மாங்கனிகளையும்
பலாக்கனிகளையும் எதிர் உந்திச்சேர்க்கும்
பழனம் என வளங் கூறப்பெற்றுள்ளது. கடல்போற் காவேரி
என்றது வற்றாமையும் பரப்பும்பற்றி. கலவம் - தோகை.
6. பொ-ரை: ஈரத்தன்மையுடைய ஆற்றுப்
படுகைகளில் வளர்ந்த பசுமையான மட்டைகளோடு கூடிய தென்னை
மரங்களின் குலைகளில் விளைந்த தேங்காயும், வாழை
மரத்தில் பழுத்த வாழைப் பழங்களும், பாளைகளையுடைய
கமுகமரங்களில் பழுத்த பாக்குப் பழங்களும்
|