728. பொய்யாமொழியார் முறையாலேத்திப்
புகழ்வார் திருமேனி
செய்யார்கரிய மிடற்றார்வெண்ணூல்
சேர்ந்த வகலத்தார்
கையாடலினார் புனலான்மல்கு
சடைமேற் பிறையோடும்
பையாடரவ முடனேவைத்தார்
பழன நகராரே. 7
__________________________________________________
விழுகின்ற சோலைகளால் சூழப்பட்ட திருப்பழன
நகர் இறைவர். அழைக்கும் சீழ்க்கை ஒலியும் அழைக்கும்
சங்கொலியும், விழவின் ஆரவாரங்களும் ஓயாத ஊரகத்தே
சென்று மூளை பொருந்திய தலையோட்டில் பலியேற்பவர்.
அடியவர்கள் போற்றி வாழ்த்த முப்புரங்களையும் அழித்தவராவார்.
கு-ரை: கையில் கபாலங்கொண்டு அடியார்கள்
வழிபடநின்ற இறைவன் இந்நகரார் என்கின்றது.
வீளைக்குரல் - அழைக்கும் குரல். மூளைத்
தலை கொண்டு - மூளையோடுகூடிய பிரமகபாலத்தைக் கொண்டு.
ஈளைப் படுகு - உலராத சேற்றோடு கூடிய ஆற்றுப்படுகை.
படுகையில் தென்னை, வாழை, கமுகு இவற்றின் பழம்
விழுகின்ற பழனம் என வளங்கூறியது.
7. பொ-ரை: திருப்பழனநகர் இறைவர்
பொய் கூறாத அடியவர்களால் முறைப்படி ஏத்திப்
புகழப் பெறுவர். சிவந்த திருமேனி உடையவர். கரிய
கண்டம் உடையவர். முப்புரிநூல் அணிந்த மார்பினை
உடையவர். கைகளை வீசி ஆடல் புரிபவர். கங்கை சூடிய
சடை முடி மீது பிறையையும், படப்பாம்பையும் ஒருசேர வைத்தவர்.
கு-ரை: உண்மை அடியார்களால் வணங்கி
வாழ்த்தப்படுமவர் பழனத்தார் என்கின்றது.
பொய்யாமொழியார் - உண்மையே பேசும்
அடியார்கள். மிடற்றார் - கழுத்தினையுடையவர்.
அகலத்தார் - மார்பினையுடையவர். பை - படம்.
|