729. மஞ்சோங்குயர முடையான்மலையை
மாறா யெடுத்தான்றோள்
அஞ்சோடஞ்சு மாறுநான்கு
மடர வூன்றினார்
நஞ்சார்சுடலைப் பொடிநீணிந்த
நம்பான் வம்பாரும்
பைந்தாமரைகள் கழனிசூழ்ந்த
பழன நகராரே. 8
730. கடியார்கொன்றைச் சுரும்பின்மாலை
கமழ்புன் சடையார்விண்
முடியாப்படிமூ வடியாலுலக
முழுதுந் தாவிய
நெடியானீடா மரைமேலயனு
நேடிக் காணாத
படியார்பொடியா டகலமுடையார்
பழன நகராரே. 9
__________________________________________________
8. பொ-ரை: மணம்கமழும் புதிய தாமரை
மலர்களையுடைய. வயல்களால் சூழப்பட்ட திருப்பழன
நகர் இறைவர், வானகத்தே விளங்கும் மேகங்கள் அளவு
உயர்ந்த தோற்றம் உடைய இராவணன் தனக்கு எதிராகக்
கயிலை மலையைப் பெயர்க்க அவனுடைய இருபது தோள்களும்
நெரியுமாறு கால்விரலை ஊன்றியவர். நச்சுத் தன்மை
பொருந்திய சுடலையில் எரிந்த சாம்பலை அணிந்த
பெருமானாகிய சிவனார் ஆவார்.
கு-ரை: இராவணனுடைய இருபது தோள்களும்
வருந்த ஊன்றியவர் இவர் என்கின்றது. மஞ்சோங்கு
உயரம் உடையான் - ஆகாயம் அளாவிய உயரம் உடையவன்.
மாறாய் - விரோதித்து. அஞ்சோடு அஞ்சும் ஆறும் நான்கும்
- இருபது. அடர - நெருங்க.
9. பொ-ரை: திருப்பழன நகர் இறைவர்
மணங்கமழ்வதும் வண்டுகள் மொய்ப்பதுமான கொன்றை
மாலை கமழ்கின்ற சிவந்த சடைமுடியையுடையவர். விண்ணளாவிய
திருமுடியோடு இவ்வுலகம் முழுவதையும் மூவடியால் அளந்த
நெடியோனாகிய திரு
|