731. கண்டான்கழுவா முன்னேயோடிக்
கலவைக் கஞ்சியை
உண்டாங்கவர்க ளுரைக்குஞ்சிறுசொல்
லோரார் பாராட்ட
வண்டாமரையின் மலர்மேனறவ
மதுவாய் மிகவுண்டு
பண்டான்கெழும வண்டியாழ்செய்யும்
பழன நகராரே. 10
__________________________________________________
மாலும், நீண்ட தண்டின்மேல் வளர்ந்த தாமரை
மலர்மேல் விளங்கும் நான்முகனும் தேடிக் காணமுடியாத
தன்மையை யுடையவர். திருநீற்றுப் பொடியணிந்த
மார்பினையுடையவர்.
கு-ரை: உலகத்தை மூவடியால் அளந்த திருமாலும்
அயனும் தேடிக்கண்டுபிடிக்கமுடியாத திருநீற்றழகர்
இவர் என்கின்றது.
கடி - மணம். சுரும்பு - வண்டு. விண்முடியாப்படி
- விண்ணை முடிவாகக் கொண்ட பூமி. நெடியான் - திருவிக்கிரமனாகிய
திருமால். நேடி - தேடி. காணாதபடி ஆர் பொடி ஆடு அகல முடையார்
எனப் பிரித்து அவர்கள் காணாதவண்ணம் நிறைந்த திருநீற்றோடு
அளாவிய மார்பை உடையவர் எனப் பொருள் காண்க.
10. பொ-ரை: வண்டுகள் வளமையான தாமரை
மலர்மேல் விளங்கும் தேனாகிய மதுவை வாயால் மிக
உண்டு பண்பொருந்த யாழ்போல் ஒலி செய்யும் கழனிகளையுடைய
திருப்பழன நகர் இறைவர், கண்களைக் கூடக் கழுவாமல்
முந்திச் சென்று கலவைக் கஞ்சியை உண்பவர்களாகிய
சமணர்கள் உரைக்கும் சிறு சொல்லைக் கேளாத
அடியவர்கள் பாராட்ட விளங்குபவராவார்.
கு-ரை: கண்களைக்கூடக் கழுவாது கஞ்சி
குடிக்கும் புறச்சமயிகளுடைய சிறுசொல்லை ஓராத அடியார்கள்
பாராட்ட இருப்பவன் பழனத்தான் என்கின்றது.
கலவைக்கஞ்சி - கலந்த கஞ்சி. வண்டு
நறவமது உண்டு பண்கெழும யாழ்செய்யும் பழனம் எனக்கொண்டு
கூட்டுக.
|