பக்கம் எண் :

 69. திருவண்ணாமலை795


749. வந்தித்திருக்கு மடியார்தங்கள்

வருமேல் வினையோடு

பந்தித்திருந்த பாவந்தீர்க்கும்

பரம னுறைகோயில்

முந்தியெழுந்த முழவினோசை

முதுகல் வரைகண்மேல்

அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல்

அண்ணா மலையாரே. 7

__________________________________________________

திரும்பும் விருப்போடு ஒன்று திரளும் அடிவாரத்தை உடைய திருவண்ணாமலை, அடியவர்கள் தன்னைத் துதிக்க இமையவர் தலைவனாய்ப் பல்லூழிக் காலங்களைக் கண்ட பழையோனாய் விளங்கும் தன்னை நினைத்துத் தொழும் அன்பர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் நிமலனாய் விளங்கும் அப்பெரியோனின் கோயிலாக விளங்குவது ஆகும்.

கு-ரை: நினைத்துத் தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலர் உறைகோயில் அண்ணாமலையார் என்கின்றது.

எனைத்து ஓர் ஊழி - எத்தகையதோர் ஊழியிலும், கனைத்த - ஒலித்த. மேதிகளைக் காணாத ஆயன் குழலூத அவைகளெல்லாம் திரளும் சாரல் என்க. மேதி - எருமை.

குருவருள்: "எனைத்தோ ரூழி அடியார் ஏத்த இமையோர் பெருமானார் நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறைகோயில்" என்ற தொடரில் நினைத்தால் முத்தி தரும் தலம் திருவண்ணாமலை என்ற குறிப்பு காணப்படுகிறது. நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் ‘அண்ணாமலையார் துணை‘ என்றே கையெழுத்திடுவர் கடிதங்களில். அதுபற்றி விசாரித்தபொழுது நினைத்தால் முந்தி தரும் தலம் அண்ணாமலை என்பதால், ‘அண்ணாமலையார் துணை’ என்று போடுகிறார்கள் என்று ஒரு நகரத்தார், கருப்பன் செட்டியார் என்பவர் குறிப்பிட்டார். இது இப்பாடல் கருத்திற்கு அரணாகவே உள்ளமை காண்க.

7. பொ-ரை: விழா நிகழ்ச்சிகளை முன்னதாக அறிவித்தெழும் முழவின் ஓசை இடையறாது கேட்பதும், பழமையான மலைப் பாறைகளுக்கு இடையே அந்திக்காலத்துப் பிறை வந்து அணைவதுமாகிய திருவண்ணாமலையில் விளங்கும் இறைவன் தன்னை வழிபட்டு வேறு