750. மறந்தான்கருதி வலியைநினைந்து
மாறா யெடுத்தான்றோள்
நிறந்தான்முரிய நெரியவூன்றி
நிறைய வருள்செய்தார்
திறந்தான்காட்டி யருளாயென்று
தேவ ரவர்வேண்ட
அறந்தான்காட்டி யருளிச்செய்தார்
அண்ணா மலையாரே. 8
__________________________________________________
நினைவின்றி இருக்கும் அடியவர்களின்
ஆகாமிய வினைகளோடு அவர்களைப் பந்தித்திருக்கும்
பாவங்களையும் போக்கியருளும் பரமனாவான். அவனது
கோயில் திருவண்ணாமலையாகும்.
கு-ரை: தொழும் அடியார்களின் ஆகாமிய
சஞ்சித வினைகளைத் தீர்க்கும் பரமன் உறை
கோயில் அண்ணாமலை என்கின்றது.
வந்தித்து இருக்கும் - வழிபட்டுச் சோகம்
பாவனையில் இருக்கும். பந்தித் திருந்த - ஆன்மாவின்
அறிவை மறைத்திருந்த. பெரிய பாறைகளில் அந்திப்
பிறை அணையும் சாரல் என்பது அண்ணாமலையே பிறை சூடிய
பெருமானாகக் காட்சியளிப்பதைக் கருதி.
8. பொ-ரை: தனது வலிமையை வெளிப்படுத்தித்
திரிபுர அசுரர்களை அழித்து அருள்புரியுமாறு தேவர்கள்
வேண்ட, தீயவரை ஒறுப்பது அறநெறியின் பாற்பட்டதாதலை
உணர்த்தும் நிலையில் அசுரர்களை அழித்துத் தேவர்கட்கு
அருள்செய்த பெருமானாகிய திருவண்ணாமலை இறைவன்,
தன் வலிமையையும், பெற்ற வெற்றிகளையும் பெரிதாக
எண்ணியவனாய்த் தனக்கு மாறாகத் தான் உறையும் கயிலை
மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் மார்பு தோள்
ஆகியனவற்றை நெரியுமாறு காலை ஊன்றிப் பின் அவ்விராவணன்
வேண்ட அவனுக்கு அருள் செய்த மேம்பாடுடையவனாவன்.
கு-ரை: இலங்கை மன்னனது தோள் நெரிய,
விரல் ஊன்றிய இறைவன் அண்ணாமலையான் என்கின்றது.
மறம் - வீரம். நிறம் - மார்பு. தேவர் திறங்காட்டியருளாய்
என்று வேண்ட, அறங்காட்டி அருள் செய்தார் எனமுடிக்க.
|