753. அல்லாடரவ மியங்குஞ்சாரல்
அண்ணா மலையாரை
நல்லார்பரவப் படுவான்காழி
ஞான சம்பந்தன்
சொல்லான்மலிந்த பாடலான
பத்து மிவைகற்று
வல்லாரெல்லாம் வானோர்வணங்க
மன்னி வாழ்வாரே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
வந்தணையும் திருவண்ணாமலையில் வீற்றிருந்தருளும்
பெருமான் நிலையாக எழுந்தருளி உறையும் கோயிலை
விரும்பித் தொழுவீராக.
கு-ரை: சமணர் புத்தர் சொல்லைக்
கேளாதே, இறைவனைத் தொழுங்கள்; அவ்விறைவன்
உறையுங்கோயில் அண்ணாமலையாகும் என்கின்றது. தட்டு
- தடுக்கு. பிட்டர் - பிரட்டர்கள். அட்டம் - குறுக்கு.
தக்க - உரை. 406.
11. பொ-ரை: இரவு வேளைகளில் படம்
எடுத்தாடும் பாம்புகள் இயங்கும் சாரலை உடைய திருவண்ணாமலையில்
உறையும் இறைவரை, நல்லவர்களால் போற்றப்படுபவனாகிய,
சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன்
போற்றிப் பாடிய அருஞ்சொல்லமைப்புக்கள் நிறைந்த
இப்பதிகப் பாடல்கள் பத்தையும் கற்று வல்லவர்
அனைவரும் வானோர் வணங்க நிலைபெற்று வாழ்வர்.
கு-ரை: அண்ணாமலையாரை ஞானசம்பந்தன்
சொன்ன இப்பாடல் வல்லார் தேவர் வணங்க
வாழ்வார்கள் என்கின்றது. அல் - இரவு. மன்னி - நிலைபெற்று.
திருஞானசம்பந்தர்
புராணம்
ஆதி மூர்த்தி கழல்வணங்கி
அங்கண் இனிதின் அமரும்நாள்
பூத நாதர் அவர்தம்மைப் பூவார் மலராற்
போற்றிசைத்துக்
காத லாலத் திருமலையிற் சிலநாள் வைகிக்
கமழ்கொன்றை
வேத கீதர் திருப்பதிகள்
பிறவும் பணியும் விருப்புறுவார்.
- சேக்கிழார். |
|