பக்கம் எண் :

 70. திருவீங்கோய்மலை801


757. மறையின்னிசையார் நெறிமென்கூந்தன்

மலையான் மகளோடும்

குறைவெண்பிறையும் புனலுந்நிலவுங்

குளிர்புன் சடைதாழப்

பறையுங்குழலுங் கழலுமார்ப்பப்

படுகாட் டெரியாடும்

இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல்

ஈங்கோய் மலையாரே. 4

__________________________________________________

கொடியினரும், ஒருபாகமாக உமையம்மையைக் கொண்டுள்ளவரும் திருவெண்ணீற்றைத் திருமேனியின் மார்பகத்தே பூசுபவரும் ஆகிய எமை ஆள்பவராகிய பெருமான் கரடிகளும், சிங்கங்களும் திரியும் சாரலை உடைய திருவீங்கோய் மலையில் எழுந்தருளியுள்ளார்.

கு-ரை: இறைவருடைய உடையும் அணியும் பூச்சும் இவை என்கின்றது.

நுதல் - நெற்றி. கறை - விடம். மிடறு - கழுத்து. எண்கு - கரடி. அரி - சிங்கம்.

4. பொ-ரை: சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் அழகிய சாரலை உடைய திருவீங்கோய் மலை இறைவர் வேதங்களை இனிய இசையோடு பாடுபவர். வளைவுகளோடு கூடிய மென்மையான கூந்தலையுடைய மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு, கலைகள் குறைந்த வெண்மையான பிறையும் கங்கையும் விளங்கும் குளிர்ந்த மென்மையான சடைகள் தாழ, பறை குழல் இவற்றோடு காலிற் கட்டிய கழலும் ஆரவாரிக்கப் பிணங்களை எரிக்கும் சுடுகாட்டுள் எரியேந்தி ஆடுபவராவார்.

கு-ரை: இடுகாட்டில் மலையான் மகளோடு ஆடும் இறைவன் இவர் என்கின்றது.

நெறி மென் கூந்தல் - நெறித்துச் சுருண்ட மெல்லிய கூந்தல். குறை வெண் பிறை - சாபத்தால் குறைந்த வெண்மையான பிறைச்சந்திரன். படுகாடு - சுடுகாடு. சிறை வண்டு - சிறகோடு கூடிய வண்டுகள்.