பக்கம் எண் :

802திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


758. நொந்தசுடலைப் பொடிநீறணிவார்

நுதல்சேர் கண்ணினார்

கந்தமலர்கள் பலவுந்நிலவு

கமழ்புன் சடைதாழப்

பந்தண்விரலாள் பாகமாகப்

படுகாட் டெரியாடும்

எந்தம்மடிகள் கடிகொள்சாரல்

ஈங்கோய் மலையாரே. 5

759. நீறாரகல முடையார்நிரையார்

கொன்றை யரவோடும்

ஆறார்சடையா ரயில்வெங்கணையா

லவுணர் புரமூன்றும்

சீறாவெரிசெய் தேவர்பெருமான்

செங்க ணடல்வெள்ளை

ஏறார்கொடியா ருமையாளோடும்

ஈங்கோய் மலையாரே. 6

__________________________________________________

5. பொ-ரை: நறுமணங்களைக் கொண்டுள்ள சாரலையுடைய திருவீங்கோய்மலை இறைவர், இறந்தார் உடலை எரிக்கும் சுடலையில் விளைந்த சாம்பற் பொடியைத் திருநீறாக அணிந்தவர். நெற்றியைச் சார்ந்துள்ள விழியையுடையவர். மணம் பொருந்திய மலர்கள் பலவும் விளங்கும் மணங்கமழ் செஞ்சடைகள் தாழ்ந்து தொங்கப் பந்து சேரும் கைவிரல்களையுடைய உமையம்மை ஒரு பாகமாக விளங்கச் சுடுகாட்டில் எரியாடுபவர்.

கு-ரை: இதுவும் அது. நொந்த - பதன் அழிந்த. பந்து அண் விரலாள் - பந்து அணுகும் மெல்லிய விரலை உடையாள். கடி கொள்சாரல் - தெய்வமணங்கமழும் சாரல்.

6. பொ-ரை: உமையம்மையோடு திருவீங்கோய்மலையில் எழுந்தருளியுள்ள இறைவர் திருநீறு அணிந்த மார்பினையுடையவர். சரஞ்சரமாக வரிசையாய் மலரும் கொன்றை மாலை பாம்பு கங்கை ஆகியவற்றை அணிந்த சடைமுடியை உடையவர். கூரிய கொடிய கணையால் அசுரர்களின் முப்புரங்களையும் சினந்து எரித்த தேவர்