பக்கம் எண் :

 70. திருவீங்கோய்மலை803


760. வினையாயினதீர்த் தருளேபுரியும்

விகிர்தன் விரிகொன்றை

நனையார்முடிமேன் மதியஞ்சூடு

நம்பான் நலமல்கு

தனையார்கமல மலர்மேலுறைவான்

தலையோ டனலேந்தும்

எனையாளுடையா னுமையாளோடும்

ஈங்கோய் மலையாரே. 7

761. பரக்கும்பெருமை யிலங்கையென்னும்

பதியிற் பொலிவாய

அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளு

மணியார் விரல்தன்னால்

__________________________________________________

தலைவர். சிவந்த கண்களையும் வலிமையையும் உடைய வெண்மையான விடையேற்றுக் கொடியினை உடையவர்.

கு-ரை: கொன்றை, அரவு, கங்கை இவற்றைச் சடையில் உடையவரும், திரிபுரங்களை எரித்தவரும் ஈங்கோய்மலையார் என்கின்றது. அகலம் - மார்பு. அயில் - கூர்மை. அடல் - வலிமை.

7. பொ-ரை: உமையம்மையோடு திருவீங்கோய்மலையில் எழுந்தருளி விளங்கும் இறைவர், வினைகளானவற்றைத் தீர்த்து அருளையே வழங்கும் விகிர்தர். விரிந்து தழைத்த கொன்றை அரும்புகள் சூடிய முடிமீது பிறைமதியையும் சூடும் நம்பர். அழகு நிறைந்ததும் தலைமை உடையதுமான தாமரை மலர்மேல் உறையும் பிரமனின் தலையோட்டுடன் அனலையும் ஏந்தி என்னை அடிமையாகக் கொண்டருளுபவர்.

கு-ரை: வினைதீர்க்கும் விகிர்தனாய் என்னை ஆளுடைய பிரான் இவர் என்கின்றது. நனை - அரும்பு. தனையார் கமலம் - தலைமை பொருந்திய தாமரை.

8. பொ-ரை: உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ள ஈங்கோய்மலை இறைவர், எங்கும் பரவிய பெருமையை உடைய இலங்கை என்னும் நகரில் புகழோடு விளங்கிய அரக்கர்களுக்குத்