நெருக்கியடர்த்து நிமலாபோற்றி
யென்று நின்றேத்த
இரக்கம்புரிந்தா ருமையாளோடும்
ஈங்கோய் மலையாரே. 8
762. வரியார்புலியி னுரிதோலுடையான்
மலையான் மகளோடும்
பிரியாதுடனா யாடல்பேணும்
பெம்மான் றிருமேனி
அரியோடயனு மறியாவண்ண
மளவில் பெருமையோ
டெரியாய்நிமிர்ந்த வெங்கள்பெருமான்
ஈங்கோய் மலையாரே. 9
__________________________________________________
தலைவனாகிய இராவணன் தலைகளையும் தோள்களையும்
தமது அழகு பொருந்திய கால் விரலால் நெருக்கி அடர்த்து,
பின் அவன் ‘நிமலா போற்றி’ என்று ஏத்த இரக்கம்
காட்டி அருள்புரிந்தவராவார்.
கு-ரை: இராவணனை விரலால் அடர்க்க,
அவன் நிமலா போற்றி என வணக்கம் செய்ய, இரக்கங்காட்டிய
பெருமான் இவர் என்கின்றது.
பரக்கும் - பரந்த. அணி - காலாழி.
9. பொ-ரை: ஈங்கோய்மலை இறைவர்
வரிகளோடு கூடிய புலித்தோலை உடையாகக் கட்டியவர்.
மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு பிரியாது
அவளுடனாக இருந்து ஆடுதலை விரும்பும் தலைமை சான்றவர்.
தம் திருமேனியின் அடிமுடிகளைத் திருமாலும் நான்முகனும்
அறியாதபடி அளவற்ற பெருமை உடையவராய் எரி உருவத்தோடு
ஓங்கிநின்ற எங்கள் பெருமான் ஆவார்.
கு-ரை: உமையொருபாதியனாய், அயனும்
மாலும் அறியாமல் எரியாய் நிமிர்ந்த பெருமான்
இவர் என்கின்றது.
வரி - கோடு. எரியாய் - அக்கினிவடிவான
அண்ணா மலையாய்.
|