பக்கம் எண் :

814திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


72, திருக்குடந்தைக்காரோணம்

பதிக வரலாறு:

உலகத்துயிர்கள் அனைத்தையும் உடம்பொடு கூட்டித் தோற்றுவித்த அந்தணனாகிய பிரமன் வழிபட்டுய்ந்த சீகாழிப் பதிச் செம்மலாகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் சிவபுரத்தைத் தொழுது பதிகம்பாடி, அண்மையிலுள்ள விடையேறும் பெருமான் திருவடியையும் போற்றத் திருவுளங் கொண்டு, திருக்குடமூக்கு என்னும் கும்பகோணத் தலத்தை அடைந்தார். அதனையுணர்ந்த அவ்வூர் அந்தணர்கள் வேத ஒலிவிம்ம, மங்கள வாத்தியங்கள் முழங்க, ஊர்ப்புறத்தே வந்து எதிர் கொண்டு அழைத்துச் சென்றார்கள். குடமூக்காலயத்தைக் குறுகினார்கள். பிள்ளையார் ’குடமூக்கை உவந்திருந்த பெருமான் எம்மிறை‘ என்று பெருகிய இசையாற் பதிகம் பாடினார்கள். பின்னர் குடந்தைக் கீழ்க்கோட்டம் வணங்கிக் கொண்டு குடந்தைக் காரோணம் சென்றார்கள். அங்கே கங்கை முதலாகிய புனித தீர்த்தங்கள் மாமகத்தில் நீராடுவதற்கு வரும் அக்கோயிலை வணங்கினார்கள். மன்மதனை எரித்த பெருமானது மலரடியைக் கண்டார்கள். கண் களித்தார்கள். ‘வாரார் கொங்கை’ என்னும் பண்ணார்ந்த திருப்பதிகம் பாடினார்கள்.

பண் : தக்கேசி

பதிக எண்: 72

திருச்சிற்றம்பலம்

776. வாரார்கொங்கை மாதோர்பாக

மாக வார்சடை

நீரார்கங்கை திங்கள்சூடி

நெற்றி யொற்றைக்கண்

____________________________________________________

1. பொ-ரை: திருக்குடமூக்கில் விளங்கும் காரோணத்தில் கருமை பொருந்திய கண்டத்தராய், எட்டுத் தோள்களோடு விளங்கும் எந்தையாராகிய இறைவர், கச்சணிந்த கொங்கைகளை உடைய பார்வதி தேவியை ஒருபாகமாக் கொண்டு, நீண்ட சடைமிசை நீர் மயமான கங்கை, பிறை ஆகியவற்றைச் சூடி, இயல்பான இருவிழி