கூரார்மழுவொன் றேந்தியந்தண்
குழகன் குடமூக்கில்
காரார்கண்டத் தெண்டோளெந்தை
காரோ ணத்தாரே. 1
777. முடியார்மன்னர் மடமான்விழியார்
மூவுலகும் மேத்தும்
படியார்பவள வாயார்பலரும்
பரவிப் பணிந்தேத்தக்
கொடியார்விடையார் மாடவீதிக்
குடந்தைக் குழகாரும்
கடியார்சோலைக் கலவமயிலார்
காரோ ணத்தாரே. 2
____________________________________________________
களோடு நெற்றியில் ஒற்றைக் கண்ணுடையவராய்.
கூரிய மழு என்னும் ஓர் ஆயுதத்தை ஏந்தி, அழகிய தண்ணளி
செய்யும் குழகராய் விளங்குகின்றார்.
கு-ரை: குடந்தைக் காரோணத்தார்
உமையொரு பாகமாக, சடையில் கங்கையையும் திங்களையும்
சூடி, மழுவேந்திய குழகன் ஆவார் என்கின்றது. வார் -
கச்சு, குழகன் - இளமை உடையவன்.
2. பொ-ரை: மாட வீதிகளை உடைய குடந்தை
என்னும் திருத்தலத்தில் உள்ளதும், மணம் கமழும்
சோலைகளில் தோகைகளோடு கூடிய மயில்கள்
விளங்குவதும் ஆகிய காரோணத்தில், இளமை பொருந்தியவராய்
இலங்கும் இறைவர், முடிமன்னர்கள், இளைய மான்
போன்ற விழியினை உடைய மகளிர், மேல் கீழ் நாடு
என்னும் மூவுலக மக்கள், தேவர், முனிகணங்கள், பவளம்
போன்ற வாயினை உடைய அரம்பையர் முதலானோர்
பலரும் பரவிப்பணிந்து போற்ற விடைக்கொடியோடு
விளங்குபவராவார்.
கு-ரை: இவர் முடிமன்னர்,
மான்விழியார், மூவுலகேத்தும் முதல்வர் என்றது.
கொடியார் விடை - கொடியில் பொருந்திய
இடபம். கடியார் சோலை - மணம் பொருந்திய சோலை.
|