778. மலையார்மங்கை பங்கரங்கை
யனலர் மடலாரும்
குலையார்தெங்கு குளிர்கொள்வாழை
யழகார் குடமூக்கில்
முலையாரணிபொன் முளைவெண்ணகையார்
மூவா மதியினார்
கலையார்மொழியார் காதல்செய்யுங்
காரோ ணத்தாரே. 3
779. போதார்புனல்சேர் கந்தமுந்திப்
பொலியவ் வழகாரும்
தாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி
லந்தண் குடமூக்கில்
மாதார்மங்கை பாகமாக
மனைகள் பலிதேர்வார்
காதார்குழையர் காளகண்டர்
காரோ ணத்தாரே. 4
____________________________________________________
3. பொ-ரை: மட்டைகளோடும் குலைகளோடும்
கூடிய தென்னைகளும் குளிர்ந்த வாழைகளும் சூழ்ந்த
அழகமைந்த குடமூக்கு என்னும் திருத்தலத்தில்,
பொன்னணிகள் விளங்கும் தனங்களையும் மூங்கில்
முளை போன்ற வெண்மையான பற்களையும் இளம் பிறை
போன்ற நெற்றியையும் இசைக்கலை சேர்ந்த மொழியையும்
உடைய மகளிர் பலரால் விரும்பப்படும் காரோணத்து
இறைவர் மலை மங்கை பங்கர்; அழகிய கையில் அனல்
ஏந்தியவர்.
கு-ரை: உமையொருபாகர், மழுவேந்தியவர்
பிறைமதியர் இவர் என்கின்றது. மடல் - மட்டை. முலையார்
என்பது முதல் கலையார் மொழியார் என்பது வரையில்
உமாதேவியைக் குறிக்குஞ் சொற்றொடர்கள். மூவா
மதியினார் - இளம்பிறை போன்ற நெற்றியினை
உடையவர்.
4. பொ-ரை: நீர் நிலைகளில் தோன்றும்
தாமரை கழுநீர் குவளை முதலிய பூக்களின் வாசனை முற்பட்டுப்
பொலிவெய்த, அழகு நிரம்பிய மகரந்தம் நிறைந்த
சோலைகளாலும் எழிலார்ந்த காடு
|