பக்கம் எண் :

 72. திருக்குடந்தைக்காரோணம்817


780. பூவார்பொய்கை யலர்தாமரைசெங்

கழுநீர் புறவெல்லாம்

தேவார்சிந்தை யந்தணாளர்

சீராலடி போற்றக்

கூவார்குயில்க ளாலுமயில்க

ளின்சொற் கிளிப்பிள்ளை

காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக்

காரோ ணத்தாரே. 5

____________________________________________________

களாலும் சூழப்பெற்றதாய் விளங்கும் அழகிய தண்மையான குட மூக்கில் விளங்கும் காரோணம் எனப் பெயர் பெறும் கோயிலில் எழுந்திருளிய இறைவர், காதல் நிறைந்த உமையம்மை பாகராக மனைகள் தோறும் பலி ஏற்பவர். காதில் குழை அணிந்தவர். காளம் என்னும் நஞ்சினைக் கண்டத்தே கொண்டவர்.

கு-ரை: பலிதேர்வார். குழைக்காதர், காளகண்டர் இவர் என்கின்றது. போது - தாமரை முதலிய பூக்கள். தாது - மகரந்தம். எழில் - அழகு. புறவு - காடு. மாதர் மங்கை - காதல்நிறைந்த உமாதேவி.

5. பொ-ரை: சிவபிரான், தெய்வத்தன்மை நிறைந்த மனத்தினராகிய அந்தணர்கள் அழகிய பொய்கைகளில் பூத்த தாமரை செங்கழுநீர் ஆகியவற்றையும் முல்லை நிலங்களில் பூத்த மல்லிகை முல்லை முதலிய மணமலர்களையும் கொண்டு தனது புகழைக் கூறித் திருவடிகளைப் போற்ற, கூவும் குயில்கள் ஆடும் மயில்கள், இன்சொல் பேசும் கிளிப்பிள்ளைகள் ஆகிய பறவைகளை உடையதும், பணியாளர்களால் காக்கப் பெறுவதுமாகிய பொழிலால் சூழப்பெற்ற அழகிய குடந்தைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளார்

கு-ரை: தாமரை செங்கழுநீர் முதலிய பூக்களைக் கொண்டு தெய்வத்தன்மை கொண்ட அந்தணர்கள் அடிபோற்ற இருப்பவர் காரோணத்தார் என்கின்றது. பூவார்பொய்கை - கொட்டி அல்லி தாமரை முதலிய நீர்ப்பூக்கள் நிறைந்த பொய்கை. அவற்றுள் தாமரையும், கழுநீரும் இறைவன் வழிபாட்டிற்கு ஏற்றன ஆதலின், பின்னர் விதந்து கூறப்பட்டன. புறவு - முல்லை. தே ஆர்சிந்தை - தெய்வத் தன்மை நிறைந்த மனம். சீரால் - இறைவன் புகழால். ஆலும் - அகவும். அந்தணாளர் அடிபோற்றப் பொழில் சூழ்ந்து அழகார் காரோணத்தார் என முடிக்க.