பக்கம் எண் :

818திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


781. மூப்பூர்நலிய நெதியார்விதியாய்

முன்னே யனல்வாளி

கோப்பார்பார்த்த னிலைகண்டருளுங்

குழகர் குடமூக்கில்

தீர்ப்பாருடலி லடுநோயவலம்

வினைகள் நலியாமைக்

காப்பார்கால னடையாவண்ணங்

காரோ ணத்தாரே. 6

782. ஊனார்தலைகை யேந்தியுலகம்

பலிதேர்ந் துழல்வாழ்க்கை

மானார்தோலார் புலியினுடையார்

கரியின் னுரிபோர்வை

____________________________________________________

6. பொ-ரை: குடமூக்கிலுள்ள காரோணத்து இறைவர் மூப்பு ஊர்ந்துவந்து நலிய நியதி தத்துவத்தின் வழியே நெறியாய் நின்று நம்மைக் காப்பவர். முற்காலத்தில் அனலையே அம்பாக வில்லில் கோத்து முப்புரங்களை அழித்தவர். அருச்சுனன் செய்த தவத்தின் நிலை கண்டு இரங்கிப் பாசுபதக் கணை வழங்கியருளிய குழகர். நம் உடலை வருத்தும் நோய்கள், நம்மைப் பற்றிய வினைகள், மனத்தை வருத்தும் துன்பங்கள் ஆகியவற்றைத் தீர்ப்பவர். காலன் அடையா வண்ணம் காப்பவர்.

கு-ரை: திரிபுரம் எரித்தகாலத்து அம்பைக்கோப்பவரும் விசயன் நிலைகண்டு அருள் செய்தவருமாகிய குழகரது குடமூக்கில் அடியார்களைக் காலன்குறுகாதவாறு காப்பவர் காரோணத்தார் என்கின்றது. மூப்பு ஊர் நலிய - முதுமை ஊர்ந்து வருத்த. நெதியார் விதியாய் - நியதியின் வழியே நடக்கும் நெறியாய். பார்த்தன் - அருச்சுனன். அடுநோய் - வருத்துகின்ற நோய்கள். அவலம் - துன்பம். மூப்பு ஊர் நலிய, நெதியார் விதியாய் முன்னே கோப்பார், குழகர் குடமூக்கில், வினைகள் நலியாமை உடலில் அடுநோய் அவலம் தீர்ப்பார். காலன் அடையாவண்ணங் காப்பார் காரோணத்தார் எனக் கூட்டுக.

7. பொ-ரை: விளங்கும் குடமூக்கில் உள்ள செல்வவளம் மிக்க காரோணத்து இறைவர், ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் ஏந்தி, உலகம் முழுதும் திரிந்து பலிஏற்று உழலும் வாழ்க்கையர், மான்