தேனார் மொழியார்
திளைத்தங்காடித்
திகழுங் குடமூக்கில்
கானார்நட்ட முடையார்செல்வக்
காரோ ணத்தாரே. 7
783. வரையார்திரடோண் மதவாளரக்க
னெடுப்ப மலைசேரும்
விரையார்பாத நுதியாலூன்ற
நெரிந்து சிரம்பத்தும்
உரையார்கீதம் பாடக்கேட்டங்
கொளிவாள் கொடுத்தாரும்
கரையார்பொன்னி சூழ்தண்குடந்தைக்
காரோ ணத்தாரே. 8
___________________________________________
தோலைப் பூணநூலில் அணிந்தவர். தேனார்
மொழி அம்மையோடு குடமூக்கில் கூடி மகிழ்ந்து சுடுகாட்டில்
நடனம் புரிபவர்.
கு-ரை: கபாலம் ஏந்திப் பலி ஏற்று
உழலும் இறைவன் காரோணத்தார் என்கின்றது.
மானார் தோலார் - மான்தோலை உடையவர். கரியின்
உரிபோர்வை - யானைத்தோலால் ஆகிய போர்வையை
உடையவர். திளைத்து - கூடி. தேனார் மொழியாள் என்பது
இத்தலத்து அம்மையின் திருநாமம்.
8. பொ-ரை: கரைகளோடு கூடிய
காவிரியாற்று நீர் சூழ்ந்த தண்மையான குடந்தை மாநகரில்
அமைந்த காரோணத்து இறைவர் மலை போன்ற திரண்ட தோள்களை
உடைய மதம் மிக்க வாட்போரில் வல்ல இராவணன் கயிலைமலையைப்
பெயர்க்க. அவ்வளவில் தம் மணம் கமழும் திருவடி
நுனிவிரலால் அம்மலையில் சேர்த்து ஊன்றி, அவ்விராவணன்
தலைபத்தும் நெரித்துப் புகழ்மிக்க சாம கானத்தைப்
பாடக் கேட்டு, அப்பொழுதே அவனுக்கு ஒளிபொருந்திய
சந்திரஹாசம் என்னும் வாளைக் கொடுத்தவர் ஆவார்.
கு-ரை: இராவணன் கயிலையை எடுக்க,
பெருவிரலை ஊன்றி நெரித்த சிரங்கள் பத்திலிருந்தும்,
சாமகானங்கேட்டு அருள்செய்தவர் இவர் என்கின்றது.
சீபாதந்தாங்குவார் இறைவனை இருகையில் அன்போடு
கூப்பிடுகிறார்கள்; இவன் மதத்தால் இருக்கிறான்.
|