பக்கம் எண் :

820திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


784. கரியமாலுஞ் செய்யபூமே

லயனுங் கழறிப்போய்

அரியவண்டந் தேடிப்புக்கு

மளக்க வொண்கிலார்

தெரியவரிய தேவர்செல்வந்

திகழுங் குடமூக்கில்

கரியகண்டர் காலகாலர்

காரோ ணத்தாரே. 9

785. நாணாரமணர் நல்லதறியார்

நாளுங் குரத்திகள்

பேணார்தூய்மை மாசுகழியார்

பேசே லவரோடும்

சேணார்மதிதோய் மாடமல்கு

செல்வ நெடுவீதிக்

கோணாகரமொன் றுடையார்குடந்தைக்

காரோ ணத்தாரே. 10

____________________________________________________

ஆதலால் அடக்குண்டான் என்பார். மதவாள் அரக்கன் என்ற உரைத்தார். விரை - மணம். உரையார்கீதம் - புகழ் நிறைந்த சாம கீதம்.

9. பொ-ரை: செல்வம் விளங்கும் குடமூக்கில் உள்ள காரோணத்து இறைவர் கருநிறம் பொருந்திய திருமாலும் சிவந்த தாமரை மலர் மேல் விளங்கும் நான்முகனும் ஒருவரோடு ஒருவர் மாறுபடப் பேசியவராய் அரிய உலகங்கள் அனைத்தும் தேடிச் சென்றும் அடி முடிகளை அளக்க ஒண்ணாதவராய் உயர்ந்து நின்ற பெரியவர். முனைப்புடையவரால் காணுதற்கு அரியவர். கருநிறம் பொருந்திய கண்டத்தினர். கால காலர்.

கு-ரை: அயனும் மாலும் அறியவொண்ணாத காலகாலர் குடமூக்கின் காரோணத்தார் என்கின்றது. கழறி - ஒருவருக்கொருவர் இடித்துப்பேசி.

10. பொ-ரை: சமணர்கள் நாணம் இல்லாதவர்கள். நல்லதை அறியாதவர்கள் நாள்தோறும் பெண்பால் குருமார்களும், தூய்மை பேணாதவர்கள். உடல் மாசை நீராடிப் போக்கிக் கொள்ளாதவர்கள். அவர்