பக்கம் எண் :

 73. திருக்கானூர்821


786. கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக்

காரோ ணத்தாரைத்

திருவார்செல்வ மல்குசண்பைத்

திகழுஞ் சம்பந்தன்

உருவார்செஞ்சொன் மாலையிவைபத்

துரைப்பா ருலகத்துக்

கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக்

கவலை கழிவாரே. 11

திருச்சிற்றம்பலம்

____________________________________________________

களோடு பேசவும் செய்யாதீர்கள். வான் அளாவிய மதியினைத் தோயும் மாட வீடுகளைக் கொண்ட செல்வச் செழுமை உடைய வீதிகளோடு கூடிய காரோணமாகிய இருப்பிடத்தை உடையவர் சிவபெருமானார். அவரைச் சென்று வழிபடுவீர்களாக.

கு-ரை: கோணமாகிய இருப்பிடத்தை உடையவர் இவர் என்கின்றது. குரத்திகள் - பெண்பால் துறவிகள் ஆரியாங்கனைகள் தூய்மை பேணார் - பரிசுத்தத்தைப் போற்றாதவர்கள். சேண் - ஆகாயம்.

11. பொ-ரை: அடர்த்தியால் கருநிறம் பெற்ற பொழில்கள் சூழ்ந்த அழகிய செல்வக் காரோணத்து இறைவரைத் தெய்வ நலத்தால் விளைந்த செல்வம் நிறைந்த சண்பை என்னும் சீகாழிப் பதியில் விளங்கும் ஞானசம்பந்தன் பாடிய செஞ்சொல் மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் உரைப்பவர், இவ்வுலகில் மீளக் கருவுற்று இடர்ப்படும் பிறப்பினை எய்தாது கவலைகள் நீங்கப் பெறுவர்.

கு-ரை: குடந்தைக் காரோணத்தாரைச் சண்பை ஞானசம்பந்தன் சொன்ன இம்மாலையைச் சொல்பவர்கள் பிறப்பறுத்துக் கவலையிலிருந்து நீங்குவார்கள் என்கின்றது. கருவார் பொழில் - கரிய சோலை. கரு ஆர் இடும்பைப் பிறப்பு - கருப்பையில் படும் துன்பம் நிறைந்த பிறப்பு.