800. பந்தமுடைய பூதம்பாடப்
பாதஞ் சிலம்பார்க்கக்
கந்தமல்கு குழலிகாணக்
கரிகாட் டெரியாடி
அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம்
பதியா வமர்வெய்தி
எந்தம்பெருமா னிமையோரேத்த
வுமையோ டிருந்தானே. 3
801. நினைவார்நினைய
வினியான்பனியார்
மலர்தூய் நித்தலுங்
கனையார்விடையொன் றுடையான்கங்கை
திங்கள் கமழ்கொன்றை
புனைவார்சடையின் முடியான்கடல்சூழ்
புறவம் பதியாக
எனையாளுடையா னிமையோரேத்த
வுமையோ டிருந்தானே. 4
____________________________________________________
3. பொ-ரை: எம்முடைய தலைவனாகிய
இறைவன், உதரபந்தத்தை அணிந்துள்ள பூதங்கள்
பாடவும், பாதங்களில் சிலம்புகள் ஒலிக்கவும்,
மணம் நிறைந்த கூந்தலையுடைய உமையம்மை காணச்
சுடுகாட்டில் எரியேந்தி ஆடி, அழகிய குளிர்ந்த
கடலால் சூழப்பட்ட எழில்மிக்க புறவம் என்னும்
சீகாழியையே இருப்பிடமாகக் கொண்டு, எழுந்தருளி
இமையோர்கள் தன்னையேத்த உமையம்மையோடு
வீற்றிருந்தருள்கிறான்.
கு-ரை: பூதம் பாட, சிலம்பொலிக்க,
உமைகாண இடுகாட்டில் நடமாடி இந்நகரை
இடமாகக்கொண்டிருந்தான் என்கின்றது.
பந்தம் உடைய பூதம் - உதரபந்தம்
என்னும் அணியை யணிந்த பூதம். கந்தம் - மணம்.
கரிகாடு - இடுகாடு. அமர்வெய்தி - விரும்பியிருந்து.
4. பொ-ரை: என்னை ஆளாக உடைய
இறைவன், நாள்தோறும் குளிர்ந்த மலர்களைத்
தூவித் தன்னை நினையும் அடியவர்களின்
|