பக்கம் எண் :

 74. திருப்புறவம்833


803. பின்னுசடைகள் தாழக்கேழ

லெயிறு பிறழப்போய்

அன்னநடையார் மனைகடோறு

மழகார் பலிதேர்ந்து

புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார்

புறவம் பதியாக

என்னையுடையா னிமையோரேத்த

வுமையோ டிருந்தானே. 6

____________________________________________________

நினைப்பிற்கு இனியவனாய், கனைக்கும் விடை ஒன்றை ஊர்தியாக உடையவனாய், கங்கை, திங்கள், மணங்கமழும் கொன்றை ஆகியவற்றைச் சூடிய அழகிய நீண்ட சடைமுடியை உடையவனாய், கடலால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழிப் பதியை இடமாகக் கொண்டு இமையவர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

கு-ரை: என்னை ஆளாக உடையவன் நினைத்தற்கினியனாய் விடையேறி, கங்கை முதலியவற்றைச் சூடி, புறம்பதியாக உமையோடு இமையோர் ஏத்த இருந்தான் என்கின்றது.

பனியார் மலர் தூய், நினைவார் நித்தலும் நினைய இனியான் எனக் கூட்டுக. கனை - ஒலி.

5, பொ-ரை: சிவபிரான், சிவந்த கண்களையுடைய பாம்பும், சிரிப்பதுபோல வாய்விண்டு தோன்றும் வெள்ளிய தலையோடும், இளைய வெண்பிறையும் தங்கும் சடைமுடியன். விடைஊர்தியன். சரியும் கோவண ஆடையை உடையாகக் கொண்டவன். அப்பெருமான் பொங்கி எழும் அலைகளையுடைய வளம் பொருந்திய கடலால் சூழப்பட்ட அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையோர் எங்கும் பரவி நின்று ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான்.

கு-ரை: அரவு முதலியவற்றை அணிந்து விடையேறி, கோவண முடுத்தி, இந்நகரை இடமாகக் கொண்ட இமையோர் ஏத்த உமையோடு இருந்தான் என்கின்றது.

முகிழ் - இளைய. சரி - தொங்குகின்ற. திரை - அலை