பக்கம் எண் :

 74. திருப்புறவம்835


805. விண்டானதிர வியனார்கயிலை

வேரோ டெடுத்தான்றன்

றிண்டோளுடலு முடியுநெரியச்

சிறிதே யூன்றிய

புண்டானொழிய வருள்செய்பெருமான்

புறவம் பதியாக

எண்டோளுடையா னிமையோரேத்த

வுமையோ டிருந்தானே. 8

____________________________________________________

சீகாழியைத் தன் பதியாகக் கொண்டு எண்ணற்ற இமையோர் தன்னை ஏத்தி வணங்க உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

கு-ரை: நஞ்சை உண்டு முப்பத்து முக்கோடி தேவர்கட்கு அமுது அளித்து வாழவைத்த அண்ணல் இந்நகரை இடமாகக்கொண்டிருந்தான் என்கின்றது. உண்ணற்கரிய - பிறரால் உண்ண முடியாத. ஒரு தோழம் தேவர் - ஒரு பேரெண்ணினையுடைய தேவர்கள், தோழம் பேரெண். ‘ஒரு தோழம் தொண்டருளன்’ (திருவாசகம்) விண்ணிற் பொலிய - விண்ணுலகை இடமாகக்கொண்டு போகத்தில் மூழ்கி விளங்க. பண்ணில் அறை - பண்ணோடு ஒலிக்கின்ற, எண்ணில் சிறந்த - எண்ணிக்கையில் மிகுந்த.

8. பொ-ரை: எட்டுத் தோள்களையுடைய சிவபிரான் விண் அதிரும்படியாகப் பெரிய கயிலை மலையை வேரோடு பெயர்த்து எடுத்த இராவணனின் வலிமை பொருந்திய தோள்கள், உடல், முடி ஆகியன நெரியுமாறு கால் விரலால் சிறிதே ஊன்றிப் பின் அவன் வருந்திய அளவில் உடலில் தோன்றிய புண்கள் நீங்க அவன் வேண்டும் வரங்கள் பலவற்றைத் தந்த பெருமானாவான். அவ்விறைவன் புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையோர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

கு-ரை: இராவணனை நெரித்த புண் நீங்க, அருள்செய்த பெருமான் இவன் என்கின்றது.

வியன் ஆர் கயிலை - இடமகன்ற கைலை. சிறிதே ஊன்றிய - மிகச் சிறிதாக ஊன்றிய. புண் - உடற்புண்ணும், உள்ளப்புண்ணும் எண்தோள் உடையான் - எட்டுத் திக்குகளாகிய தோள்களை உடையவன்.