806. நெடியானீடா மரைமேலயனும்
நேடிக் காண்கில்லாப்
படியாமேனி யுடையான்பவள
வரைபோற் றிருமார்பிற்
பொடியார்கோல முடையான்கடல்சூழ்
புறவம் பதியாக
இடியார்முழவா ரிமையோரேத்த
வுமையோ டிருந்தானே. 9
807. ஆலும்மயிலின் பீலியமண
ரறிவில் சிறுதேரர்
கோலும்மொழிக ளொழியக்குழுவுந்
தழலு மெழில்வானும்
போலும்வடிவு முடையான்கடல்சூழ்
புறவம் பதியாக
ஏலும்வகையா லிமையோரேத்த
வுமையோ டிருந்தானே. 10
____________________________________________________
9. பொ-ரை: திருமாலும், நீண்டு
வளர்ந்த தாமரை மலர் மேல்உறையும் நான்முகனும்
தேடிக் காண இயலாத தன்மையை உடைய திருமேனியன்.
பவளமலை போன்ற திருமார்பின்கண் திருநீறு அணிந்த
அழகினையுடையவன். அவ்விறைவன், கடல் நீரால்
சூழப்பட்டதும் இடி போன்ற முழக்கத்தையுடைய முழா
ஒலிப்பதும் ஆகிய புறவம் என்னும் சீகாழியைத்
தனக்குரிய பதியாகக் கொண்டு, இமையவர் ஏத்த
உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான்.
கு-ரை: அயனும் மாலும் தேடிக்
காணமுடியாத திருமேனியை உடையவன், திருநீற்றழகன்
இவன் என்கின்றது. நெடியான் - திருமால். படியாமேனி
உடையான் - அடங்காத அழல் உருவாகிய மேனியை
உடையவன். பொடி - விபூதி.
10. பொ-ரை: ஆடுகின்ற மயிலின்
தோகையைக் கையில் ஏந்திய அமணர்களும் அறிவில்
குறைந்த புத்தர்களும், புனைந்து பேசும் மொழிகளைத்
தாழுமாறு செய்பவனாய், கூடி எரியும் தழலும், அழகிய
வானமும் போன்ற செவ்வண்ணம் உடைய சிவன், கடல்
நீர் சூழ்ந்த
|