808. பொன்னார்மாட நீடுஞ்செல்வப்
புறவம் பதியாக
மின்னாரிடையா ளுமையாளோடு
மிருந்த விமலனைத்
தன்னார்வஞ்செய் தமிழின்விரக
னுரைத்த தமிழ்மாலை
பன்னாள்பாடி யாடப்பிரியார்
பரலோ கந்தானே. 11
திருச்சிற்றம்பலம்
____________________________________________________
புறவம் என்னும் சீகாழியைத் தனது
பதியாகக் கொண்டு இமையோர் பொருந்தும் வகையால்
போற்ற உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.
கு-ரை: புத்தரும் சமணரும் கூறும்
மொழிகளைக் கடந்து, விண்ணையும் தீயையும் ஒத்த
வடிவமுடையவனாக இருப்பவன் இவன் என்கின்றது.
கோலும் மொழிகள் ஒழிய - கோலிச் சொல்லும்
மொழிகள் பிற்பட. குழுவும் - கூடி எரிகின்ற. ஏலும்
வகையால் - பொருந்தும் வகை. ஆலும் மயில் - உயிர்
உள் வழி அடை.
11. பொ-ரை: அழகு பொருந்திய உயர்ந்த
மாட வீடுகளை உடையதும், செல்வச் செழுமை
வாய்ந்ததும் ஆகிய புறவம் என்னும் சீகாழிப்
பதியில், மின்னல் போன்ற இடையினையுடைய
உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ள குற்றமற்ற
இறைவனைத் தன் அன்பால் தமிழ் விரகனாகிய
ஞானசம்பந்தன் போற்றி உரைத்த இத்தமிழ்
மாலையைப் பல நாள்களும் பாடி ஆடுவோர்,
மேலுலகத்தில் பிரியாது உறைவர்.
கு-ரை: புறவம்பதியாக இறைவியோடு
இருக்கின்ற விமலனை அன்புசெய்து, தமிழாற்சொன்ன
இப்பாடலைப் பாடியாடுவார் பரலோகம் பிரியார்
எனப் பயன் கூறுகிறது. ஆர்வம் - அன்பு
|