830. கந்தனைமலிகனை கடலொலியோதங்
கானலங்கழிவளர் கழுமலமென்னும்
நந்தியாருறைபதி நான்மறைநாவ
னற்றமிழ்க்கின்றுணை
ஞானசம்பந்தன்
எந்தையார்வளநக
ரிலம்பையங்கோட்டூ
ரிசையொடுகூடிய
பத்தும்வல்லார்போய்
வெந்துயர்கெடுகிட விண்ணவரோடும்
வீடுபெற்றிம்மையின் வீடெளிதாமே.
11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
11. பொ-ரை: மணம் நிரம்பியதும்,
கடல் ஒலியோடு அதன் வெள்ளம் பெருகிக்
கடற்கரைச் சோலைகள் உப்பங்கழிகள் ஆகியன
நிரம்புவதும் ஆகிய கழுலம் என்னும் சிவன் உறை
பதியாகிய சீகாழியில் தோன்றிய நான்மறை ஓதும்
நாவினனும் நற்றமிழ்க்கு இனிய
துணையாயிருப்பவனுமாகிய ஞானசம்பந்தன் எந்தையார்
உறையும் வளநகராகிய இலம்பையங்கோட்டூரில்
வீற்றிருந்தருளும் இறைவன் மீது பாடிய இசையொடும்
கூடிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கள் தம்
கொடிய துயர்கள் ஓடிக்கெட விண்ணவரோடும்
வீற்றிருந்து பின் விண்ணிலிருந்து விடுபட்டு வீடு
பேற்றையும் இப்பிறப்பு ஒன்றாலேயே எளிதாகப்
பெறுவார்கள்.
கு-ரை: இலம்பையங்கோட்டூரைப்
பற்றிய இப்பாடல் பத்தையும் இசையொடு
ஓதவல்லவர், துன்பநீங்கித் தேவரோடும் உறைந்து,
அதினின்றும் விடுதலை பெற்று வீட்டின்பத்தையும்
எய்துவர் என்கின்றது. கந்தனை - மணம். நந்தியார் -
சிவன். கெடுகிட - கெட.
திருஞானசம்பந்தர்
புராணம்
அங்குள்ள பிறபதியில்
அரிக்கரியார் கழல்வணங்கிப்
பொங்குபுனற் பால்யாற்றின் புடையில்வட
பாலிறைவர்
எங்கும்உறை பதிபணிவார் இலம்பையங்கோட்
டூர்இறைஞ்சிச்
செங்கண்விடை உகைத்தவரைத் திருப்பதிகம்
பாடினார்.
- சேக்கிழார். |
|